இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் துவங்க இருக்கிறது இதனால் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான, கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க உள்ளது. எப்போதும் போல் தமிழகத்தில் இருமுனைப் போட்டிக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மறுபக்கம் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு போட்டி போட தயாராகி […]
தூத்துக்குடி விவகாரத்தை திசை திருப்பவே, ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையமே விளக்கமளிக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல், துணை முதலமைச்சரோ, அமைச்சரோ அங்கு செல்வது விஷப்பரீட்சை என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தமிழகத்தில் பா.ஜ.க.வை குழிதோண்டி புதைக்க தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய 3 பேர் மட்டுமே போதும் என்று டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும், புரிந்துகொண்டு ஆளுநரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்