திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில் விசிக தாக்கம், மற்ற மாநிலங்களில் விசிக கட்சியின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ” நாம் அரசியலில் அடியெடுத்து வைத்த போதே நாம் கூறியது, ‘ எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பது அளிக்கப்பட வேண்டும்’ என்பது தான் நாம் வைத்த முதல் முழக்கம். அந்த இலக்கை உடனடியாக […]
சென்னை : திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இரண்டு பக்க அறிக்கையை வெளிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகவே நமது களப்பணிகள் மற்றும் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, நமக்கு எதிரானவர்கள் விமர்சனங்கள் என்னும் பெயரால் மிகவும் அப்பட்டமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். நம்மை வீழ்த்துவதற்கு கையாண்டுவரும் உத்திகளில் முதன்மையானது அவதூறு பரப்புவது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் தேவையான மாற்றங்களை ஏற்று கொள்கிறோம். நம்மை விமர்சிப்பவர்களில் […]
சென்னை : வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் வருகை தந்து விசிக தலைவர் திருமாவளவன் கையால் அம்பேத்கர் புத்தகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அளவில் […]
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவையில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதேபோல, அசாம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, விசிக துணை பொதுச்செயலாளரும், மார்ட்டின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் இந்த சோதனை நேற்று மாலை வரை நடைபெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு சிலர் இணையதளம் […]
சென்னை : வரும் டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வு குறித்த பேச்சு தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. இந்த நிகழ்வில் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட இருந்தார். அப்போது விழா […]
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக – அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியான போது திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கள், தவெக முதல் மாநாட்டில் விஜய் இதே கருத்தை கூறுகையில், தவெக – விசிக கூட்டணி பேச்சுக்கள் என விசிக கூட்டணி பற்றி அவ்வப்போது தமிழக அரசியலில் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த பல்வேறு யூகங்களுக்கு பதில் அளிக்கும் […]
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் , விசிக எம்பி திருமாவளவன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “2024 – 2025ஆம் ஆண்டுக்கான திட்ட வளர்ச்சி குறித்த முதல் கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் […]
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், 2026 தேர்தல் கூட்டணி பற்றியும் பல்வேறு அரசியல் கருத்துக்கள் உலா வருகின்றன. அதில் குறிப்பாக விசிக கட்சி கூட்டணி குறித்த பல்வேறு யூகங்கள் பதிவிடப்பட்டும் சூழலில் தங்கள் கூட்டணி பற்றி பரவும் செய்திகளுக்கு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “விசிக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை […]
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவை தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக கட்சித் தலைவர் விஜய் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் இருவருமே கலந்து கொள்வர் எனக் கூறப்பட்டது. தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருமாவளவன், விஜய் ஒரே மேடையில் […]
சென்னை : தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நகர்வுகள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக விஜயின் தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு பிறகு அவர் பேசிய கருத்துக்கள், கொள்கைகள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கூற்று விசிக அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கூற்றை முன்னர் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். அதே […]
சென்னை : கடந்த அக்டோபர் 27 அன்று விக்கிரவாண்டில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் தான் தற்போது வரையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக திமுக கூட்டணி வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாசிசமா பாயாசமா.? ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என விசிக முன்வைத்த கோரிக்கையை மறைமுகமாக குறிப்பிட்டு விஜய் கூட்டணி பற்றியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விதத்திலும் பேசினார். மேலும், […]
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். முதல் மாநாட்டில் பேசிய அவர், “அவங்க பாசிசம்னா., நீங்க என்ன பாயாசமா.?., குடும்ப ஊழல் ஆட்சி, திராவிட மாடல் என ஏமாற்றுகின்றனர் ” என ஆளும் திமுக அரசை நேரடியாகவே கடுமையாக விமர்சித்தார். மேலும், ஆட்சி – அதிகாரத்தில் பங்கு என்று கூட்டணிக்கும் மறைமுக அழைப்பு விடுத்தார். விஜயின் இந்த […]
சென்னை : விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளை உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தான் கட்சியின் வழிகாட்டி என்றும் தவெக தலைவர் விஜய் கூறினார். அதனுடே, பெரியாரின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் , அவரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், யாருடைய மத நம்பிக்கையையும் நாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் கூறினார். மேலும், […]
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று உளுந்தூர்பேட்டையில் நடத்தியது. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தேசிய அளவில் மது ஒழிப்பு கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு […]
சென்னை : தமிழக அரசியலில் அதிகம் எதிர்நோக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விசிக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டனர். விசிக தலைவர் திருமாவளவன் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இந்த மாநாடு பற்றி திருமாவளவன் செய்தியாளர்களிடம் அறிவிக்கும் போதிலிருந்தே மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமாக பேசப்பட்டன. திருமாவளவன் […]
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் சார்பில் இன்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். மேலும் கூட்டணி கட்சிகளான திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் , மமக, தமிழக வாழ்வுரிமை கட்சி என பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாடு தொடங்கியதும், விசிக தலைவர் […]
சென்னை : இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக மது ஒழிப்பு மாநாடு, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை கூறினார் . அவர் பேசுகையில், ” மது ஒழிப்பு தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று. விசிகவின் மாநாடு தற்போது தேவையான ஒன்றுதான். அதுவும் காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடப்பது […]
சென்னை : தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு இன்று மாலை 3 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்ததில் இருந்து மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. ‘மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம்’ என்கிற திருமாவின் அழைப்பு திமுக கூட்டணிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனை அடுத்து வந்த பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி […]
சென்னை : கடந்த ஜனவரியில் விசிக கட்சியில் இணைந்து குறுகிய காலத்திற்குள் விசிகவின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிற்கு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுக பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார். “விசிக கூட்டணி இல்லாமல் வடமாநிலங்களில் திமுக ஜெயிக்க முடியாது.”,” சினிமாவிலிருந்து வந்தவர்களே துணை முதல்வர் (உதயநிதி ஸ்டாலின்) ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா.?” என்று அவர் பேசிய […]
சென்னை : விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாடு தான் தற்போது தமிழக அரசியலில் ‘ஹாட் டாபிக்’-காக மாறியுள்ளது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்மொழியாக அழைப்பு விடுத்தார். அப்போது, ‘விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம்.’ என கூறினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவனின் பேச்சு அரசியல் […]