சென்னை : திமுகவின் அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தி அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனியாக ஒரு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவராகத் தான் பொறுப்பேற்று ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நன்னாளில் இந்த அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2018-ஆம் ஆண்டு இதே நாளில்தான் கழகத் தலைவராகத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அப்போது நாம் யார், நம் கொள்கைகள் என்ன, நமக்குள் இருக்கும் குறைகள் எவை மற்றும் காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை என்பது குறித்துப் பேசியதை அவர் சுட்டிக்காட்டினார். "காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை; மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்" என்று அன்று தான் குறிப்பிட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
கழகத் தலைவர் பொறுப்பில் ஒன்பதாவது ஆண்டில் எடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், கட்சியின் வளர்ச்சியை முன்னிறுத்தியே இந்த மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த மாற்றத்திற்குத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், அனைவரின் துணையோடு மீண்டும் கழகத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வேன் என்றும் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
மாவட்டங்களின் பட்டியல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், பத்மநாபபுரம், விளவங்கோடு.
திருநெல்வேலி: திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம்.
தூத்துக்குடி: திருச்செந்தூர், திருவைகுண்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி.
தென்காசி: சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர்.
விருதுநகர்: சிவகாசி, விருதுநகர், திருச்சுழி, சாத்தூர், அருப்புக்கோட்டை, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி (தனி).
சிவகங்கை: சிவகங்கை, மானாமதுரை (தனி), காரைக்குடி, திருப்பத்தூர்.
இராமநாதபுரம்: இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி (தனி), முதுகுளத்தூர்.
தேனி: பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, கம்பம்.
திண்டுக்கல்: நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர்.
மதுரை: திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய, மதுரை மேற்கு.
நீலகிரி: உதகமண்டலம், கூடலூர், குன்னூர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர்.
திருப்பூர்: திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, தாராபுரம், காங்கேயம், அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.
கோவை: பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம்.
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி.
தருமபுரி: பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்.
நாமக்கல்: திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம், இராசிபுரம், நாமக்கல், பரமத்தி வேலூர்.
சேலம்: மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, கெங்கவல்லி, ஆத்தூர்.
புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி.
கரூர்: அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை.
அரியலூர்: அரியலூர், ஜெயங்கொண்டம்.
பெரம்பலூர்: பெரம்பலூர், குன்னம்.
திருச்சி: லால்குடி, மணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, முசிறி, துறையூர், மணப்பாறை, திருவெறும்பூர்.
திருவாரூர்: திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார்.
கடலூர்: திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், கடலூர், குறிஞ்சிப்பாடி.
தஞ்சாவூர்: திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி.
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம்.
விழுப்புரம்: செஞ்சி, மைலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், திண்டிவனம், வானூர், விழுப்புரம்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு.
திருப்பத்தூர்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.
வேலூர்: குடியாத்தம், காட்பாடி, வேலூர், அணைக்கட்டு.
இராணிப்பேட்டை: அரக்கோணம், சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு.
செங்கல்பட்டு: திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம்.
காஞ்சிபுரம்: ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூவிருந்தவல்லி, ஆவடி, திருத்தணி, திருவள்ளூர்.
சென்னை: திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், கொளத்தூர், இராயபுரம், ஆர்.கே.நகர், எழும்பூர், அண்ணா நகர், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, மதுரவாயல், அம்பத்தூர், துறைமுகம், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர்.
