“பெரியாரை தொடாமல் ‘அரசியல்’ செய்ய முடியாது.!” விஜயை வாழ்த்திய உதயநிதி.!
நேற்று பெரியார் திடலில் பெரியார் சிலைக்கு மரியாதை செய்த த.வெ.க தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : நேற்று தந்தை பெரியார் பிறந்த தினத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாரின் கூற்றுகளை நினைவுகூர்ந்து தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதே போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டிருந்தார்.
இந்த வாழ்த்துப் பதிவை அடுத்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் , சென்னை பெரியார் திடலுக்கு வந்த அக்கட்சி தலைவர் விஜய் , அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து , தற்போது பெரியார் சிலைக்கு மரியாதை என தனது அரசியல் நிலைப்பாட்டை த.வெ.க தலைவராக விஜய் வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், த.வெ.க தலைவர் விஜய் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், ” தமிழ்நாட்டில் பெரியாரை தொடாமல் இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது. பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.” என கூறிவிட்டு சென்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025