கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில், தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவின் முதல் பகுதியாக, தமிழக அரசு நிதி உதவியால் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை இரு மாநில முதலமைச்சர்களும் ஒன்றாக திறந்து வைத்து பார்வையிட்டனர். அதன்பிறகு, வைக்கம் […]
சென்னை : நேற்று தந்தை பெரியார் பிறந்த தினத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாரின் கூற்றுகளை நினைவுகூர்ந்து தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதே போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டிருந்தார். இந்த வாழ்த்துப் பதிவை அடுத்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் , சென்னை பெரியார் திடலுக்கு வந்த அக்கட்சி தலைவர் விஜய் , அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் […]
பெரியார் துவங்கிய சமூக நீதி இயக்கமானது அதன் பின்னர் அண்ணாவிடம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியாக உருவான வரலாறு என்ன என்பதை தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் கார்த்திக் எனும் பட்டதாரி இளைஞர் ஆய்வு செய்து அதனை லண்டன் கல்லூரியில் சமர்ப்பித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த, லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் கார்த்திக் “திராவிட பாதை” பெரும் பெயரில் ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 100 புதிய பேருந்துகள் தொடங்கி […]
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருதும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கி கௌரவித்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும், 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு.! அதன்படி தந்தை பெரியார் விருதுக்காக சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப வீரபாண்டியன் தேர்வு […]
சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முதல்வரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட். இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சிகள் பல வரவேற்றுள்ளது. அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த அறிவிப்பினை வரவேற்று தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பகுத்தறிவு […]
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி அவதூறாக பேசியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை விடுத்தது. மதுரையில், பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவரைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி, அவரது உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் […]
துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது என அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் அவரது வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் […]