மதுரை :மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டில் புதிய பாடல் வெளியிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது.
வெளியான ஒரு தகவல்களின்படி, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் தவெகவின் புதிய தீம் பாடல் இன்று(ஆக.21) வெளியிடப்படுகிறது. தவெக கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 1967, 1977இல் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது குறித்து விஜயின் பேச்சும் பாடலில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், “வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் மூன்றாவது அதிகாரப்பூர்வ கட்சிப் பாடலாக இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மாநாட்டில் இந்தப் பாடல் வெளியீடு குறித்து மேலும் உறுதியான தகவல்கள் மாநாட்டின் நிகழ்வுகளின் போது தெரியவரும்.
