தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணத்திற்கான முன்பதிவு இன்று (ஆக.18) தொடங்கியது.

Diwali 2025 Train Ticket Booking

சென்னை :தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வோர் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்ய பயணிகளுக்கு ரயில்வே துறை அறிவுரை செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 18, 2025) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 17ம் தேதிக்கான முதல் பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

குறிப்பாக, அக். 17-ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு முன்பதிவு இன்று தொடங்கி, அதாவது அக்டோபர் 17ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரையிலான டிக்கெட்டுக்களை நாளை முதல் புக்கிங் செய்யலாம்.

இந்நிலையில், IRCTC இணையதளம் அல்லது ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் புக் செய்யலாம். சில நிமிடங்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர வாய்ப்புள்ளதால், சீக்கிரம் முன்பதிவு செய்யவும்.