சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்திற்கும், உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (ஜன. 13ஆம் தேதி) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இந்த 2 மாவட்டங்களுக்கு மட்டும் ஒருநாள் கூடுதல் விடுமுறை வருகிறது. இதன் மூலம், கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் மொத்தம் […]
சென்னை: குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா வெதர் மென் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நேற்று முதல் தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் […]
சென்னை: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக, இன்று (டிச,13) மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், 16ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழையும், 17ஆம் தேதி 3 மாவட்டங்களில் […]
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. தற்பொழுது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, வேலூர், கடலூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், […]
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை, […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் (11.12.2024) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். கனமழை: ஆழ்ந்த […]
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் 10 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று அவை பள்ளியிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வந்தது. தற்போது நிலைமை சிறிது சீரடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், அம்மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி உட்பட 7 அரசுப் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் […]
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை (டிச.04) அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர்: கனமழை எதிரொலியால் முதல் மாவட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை (டிச.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜல் புயல் எதிரொலியால், கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கியதால், பல்வேறு பள்ளி கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்னர். மேலும், தொடர் மழையால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழையால் […]
விழுப்புரம்: நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இதில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று பிற்பகல் முதல் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகவும் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. புயலால் ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால், பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது, இது இன்று புயலாக வலுவடைந்து இலங்கையை ஒட்டி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று முதலே அந்தந்த மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து […]
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம் ஆண்டில் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் பொதுவிடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மொத்தம் 5 நாட்கள் உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி விடுமுறையுடன் 2025ஆம் ஆண்டு தொடங்குகிறது. பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட 24 நாள்களில், 3 ஞாயிறும் அடங்கும். […]
தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில், தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் தீவிரத்தால் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (நவ-20, புதன்) மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த […]
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி […]
சென்னை : தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024) அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அறிவித்துள்ளார். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. முன்னதாக, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை தீவிரம் நீட்டித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து […]
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 23ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதேபோல், காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் […]
சென்னை : தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. இன்று (அரைநாள்) முதல் நவ.3 வரை தொடர் விடுமுறை வருவதால், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசுப் […]
புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை (30.10.2024) அன்று பொது விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாளன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3 […]
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு (23-10-2024) இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கோவை, திருப்பூரில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் […]