சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3,4 இல் தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லை – தாம்பரம் இடையே நவ.3 ஆம் தேதியும், தாம்பரம்- நெல்லை இடையே நவ.4 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்களுக்காக நவம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை – தாம்பரம் இடையேவும், மறு மார்க்கத்தில் நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 2.30 […]
புதுடெல்லி : பொதுவாக ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்றால், ஒரு மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு கூடுதல் நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். தற்போது ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் விதி மாறியுள்ளது. ஆம், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி,விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் பயணிக்க டிக்கெட்டை முன்கூட்டியே […]
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி பேச்சு. மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே காணொளி வாயிலாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் பிரதமர் […]
ரயில் திட்ட வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களும் இணையதளங்களும் அதிகளவில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ,ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவது , 2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் நீக்கப்படும், அல்லது, 2024-ஆம் ஆண்டு முதல் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு உடையவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளதாக ஒரு சில செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை, தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் […]
பஞ்சாபில் ரயில்களை மீண்டும் இயக்கபோவதில்லை என ரயில்வே மையம் தெரிவித்துள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்டத்தால் பஞ்சாப் வழியாக செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இதற்கிடையில், பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, ரயில்களை நிபந்தனையுடன் மீண்டும் தொடங்குவதில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் எந்த சிக்கலும் இல்லை என்று மாநில அரசு முழுமையான உத்தரவாதம் […]
ரயில்வேயில் உள்ள 1.40 லட்ச காலிப்பணியிடங்களுக்கு சுமார் 2.40 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, குறித்து தெரிவித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வேயில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பட உள்ளன. கொரோனா காரணாத்தால் ஒத்துவைக்கப்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகள் டிச.,15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் 22 பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க தென் மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 23 முதல் 27 வரை கர்நாடகாவிலிருந்து புறப்படும் 22 சிறப்பு ரயில்களை தசரா, தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் என்று தென் மேற்கு ரயில்வே நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் பெங்களூரு யெஸ்வந்த்பூரிலிருந்து சத்தீஸ்கரில் கோர்பா வரை அக்டோபர் 23 முதல் நவம்பர் 27 வரை மற்றும் கோர்பாவிலிருந்து யேஸ்வந்த்பூர் வரை அக்டோபர் 25 முதல் […]
கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நாட்டில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் வந்தே பாரத் ரயில் வருகின்ற அக்டோபர் 15 முதல் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் மீண்டும் தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ‘ஜிதேந்திர சிங்’ அவர் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுடெல்லி […]
நான்காம் கட்ட தளர்வுகளின் அடிப்படையில் இந்திய ரயில்வே மேலும் 100 பயணிகள் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்று நோய்களுக்கு மத்தியில் நான்காம் கட்ட தளர்வுகளை தளர்த்திய பின்னர், ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக அதிகமான பயணிகள் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்ம், இந்திய ரயில்வே மேலும் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்தது. ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக 100 சிறப்பு […]
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முழுவதுமாக முடங்கிய நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் தான் ரயில்கள், பேருந்துகள் என அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான பணம் பல […]
தனியார் ரயில் சேவைக்கான வரையறையை மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாம். அதன்படி சரியான நேரத்தில் ரயிலை இயக்க தவறினால் கடுமையான அபராதம் விதிப்பது, பராமரிப்பு தொகை என பல்வேறு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளனவாம். தனியார் ரயில், ரயில் நிலையத்திற்கு தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்து விட்டால் அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். 15 நிமிடம் தாமதமாக வந்தால் அது சரியான நேரத்தில் வராததாக கருதப்படும். ரயில்வே உட்கட்டமைப்பை பயன்படுத்த தனியார் நிறுவனங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 512 ரூபாய் செலுத்த […]
இந்த ஆண்டிற்கான பல துறைகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை மாநில அரசுகள் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.Railways, Indian Army, CISF 2020-ஆம் ஆண்டிற்கான ரயில்வே, இந்திய ராணுவம், சி.ஐ.எஸ்.எஃப் வேலைவாய்ப்பின் ஆட்சேர்ப்பு குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. எஸ்.எஸ்.பி(SSB ) கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு : பல்வேறு துறைகளில் உள்ள மொத்தம் 1522 கான்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆகஸ்ட் 27 -க்கு முன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். […]
ரயில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு சதாப்தி மற்றும் ராஜதானி ஆகிய ரயில்களுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. சாதாரண ரயில்களில் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு ரெண்டு பைசாயும் , குளிர்சாதன வசதி வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 4 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண […]
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ரயில்வே ஊழியர்களுக்கு78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.எனவே 11,52,000 […]
சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசிய போது “மகாத்மா காந்தி 150- வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்” என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என அறிவித்து உள்ளது. அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறு சுழற்சி […]
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள பாலக்காடு ரயில் நிலையத்தின் தண்டவாளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து கேரளாவிற்கு பாலக்காடு வழியாக செல்லும் அதிவிரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 நாள்களுக்கு 9 அதிவிரைவு ரயில்கள் இயங்காது என தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.
தற்பொழுது உள்ள காலத்தில், செல்பி எடுப்பது மிகவும் பழக்கமான ஒன்று. மக்கள் எங்கு போனாலும் தங்களின் மொபைல் போனில் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து அதை ஒரு ஞாபகார்த்தமாக வைத்து வருகின்றனர். அதே போல், செல்பியால் உயிரிழப்புகளும் நிறைய ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக, ரயில்வே காவல்துறையினர் ரயில்வே நிலையம், ரயில் தண்டவாளம் மற்றும் ஓடும் ரயிலில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என எச்சரிக்கை விதிக்கப்படும் என கூறி வருகின்றனர். மேலும், எல்லா ரயில்வே நிலையங்களில் […]
ஒரத்தநாடு – தஞ்சை இடையே புதிய வழிதடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி வழக்கு. விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ரயில்வே துறை அதிகாரிகள் பதில் தர உத்தரவிட்டு விசாரணையை ஏப்.16க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
சென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் ரயில்வே துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.