சென்னை : பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, மொத்தம் 16 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 2 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பயணிகள் வசதிக்காக இன்று சென்னை […]
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான 4-வது வழித்தடப் பணிகளுடன் தொடர்புடைய இன்டர்லாக் அல்லாத பணிகளை எளிதாக்குவதற்காக, ரயில் சேவைகளின் முறையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இதைக் கவனத்தில் கொண்டு உங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தனது அறிக்கையில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மார்ச் […]
சென்னை : தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமீபத்தில் வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார்கள், இப்போது போட்டிகள் முடிந்த நிலையில், அவர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஏனென்றால், கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் ஏறியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி வீரர்கள் ரயிலில் ஏற முடியாததால் வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர். டெல்லியில் 28-ஆண்டுகளுக்கு […]
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த பெண்ணை, ஜோலார்பேட்டை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய வேலூர் கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைதான ஹேமராஜ் மீது செல்போன் […]
உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், ரயிலின் பாதுகாப்பு பெட்டியும், என்ஜினும் தடம் புரண்டுள்ளன. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பிரயாக்ராஜில் இருந்து ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் […]
சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு உள்ளதால், வாகன ஓட்டிகள் சாலைகள் தெரியாமல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. தெருக்களில் எதிரில் வரும் ஆட்களே தெரியாத […]
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புஷ்பக் ரயிலில் தீப்பற்றியதாக பரவிய வதந்தியை நம்பி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, `அபாய அலாரம்’ அடித்ததால், மும்பையில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள பச்சோராவிற்கு அருகில் உள்ள மஹேஜி மற்றும் பர்தாட் நிலையங்களுக்கு இடையில் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், வேகமாக ரயில் பெட்டியில் இருந்து […]
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இன்று மாலை 5 மணியளவில் ரயிலில் தீ விபத்து என பரவிய தகவலால் புஷ்பக் ரயிலில் இருந்தவர்கள் அபாயச் சங்கிலியை இழுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது, எதிரே வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் […]
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல அவர் நடிக்கும் படங்களில் இருந்தும் அவருக்கு வாழ்த்து செய்து வந்து கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தில் இருந்து தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவாக சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கன்னக்குழிக்காரா எனும் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை […]
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் – திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 4,5,10,11,12,13,17,18,19 தேதிகளில் திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (06190) மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதே நேரம், 4,5,10,11,12,13,17,18,19 தேதிகளில் தாம்பரத்திலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரயில் (06191) இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது […]
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில் சேவை சுமார் 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். எண்ணூர் – அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்த, எண்ணூர் – திருவொற்றியூர் ரயில் நிலையங்களில், ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தப்பட்டது. இந்த […]
தூத்துக்குடி : மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கனமழை காரணமாக தூத்துக்குடி ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும், தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் […]
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டள்ளது. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் மாற்று அட்டவனைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ரயில்கள் […]
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன, ரயில் பாதையில் கற்பாறைகள் விழுந்தன. தண்டவாளத்தின் குறுக்கே மரங்கள் விழுந்து ரயில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் உதகமண்டலம் மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது, மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆம், சீரமைப்பு பணிகள் முடிந்ததால், நாளை […]
டெல்லி : உலகத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு ரயில் சேவையான உக்ரைனின் ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன்னில் மோடி பயணம் மேகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ரஷ்யா – உக்ரைன் […]
தெலுங்கானா : காட்கேசரின் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரயிலின் என்ஜின் முன், முதியவரின் உடல் பிணமாக தொங்கியபடி உள்ளது. காந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர் சுமார் 65-70 வயதுடையவர் என்றும், சம்பவ இடத்தைப் பார்வையிட்ட GRP இன் புலனாய்வு […]
வைரல் வீடியோ : இன்றயை காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வதற்காக பலரும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் சிலர் நூலிழையில் உயிர்தப்பித்தும் வருகிறார்கள். அப்படி தான் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயற்சி செய்து நூலிலையில் உயிர்தப்பியுள்ளார். பெண் ஒருவர் தனது நண்பருடன் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டு ரீல்ஸ் செய்வதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. ரயில் பக்கத்தில் […]
பாகிஸ்தான் : அப்பாவி மக்களை கேலி செய்வதும் அவர்களை துன்புறுத்துவதும் எப்போதும் நல்ல விஷயம் இல்லை. அப்படி செய்தால் உடனடியாகவே அதற்கு தண்டனை கிடைத்துவிடும். அதற்கு உதாரணமாக தான் இப்போது ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே உள்ள ஏரியில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டு வாகனத்தை கழுவி கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த நேரத்தில் ரயில் அந்த பகுதியில் வந்ததை கவனித்த இளைஞர்கள் ரயிலில் இருப்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து […]
ரயில் : பயண நேரத்தில் அவசரம் காரணமாக பாதியில் இறங்கும்போது பலர் விபத்தில் சிக்கி வருகிறார்கள். ஆபத்தை உணராமல் அப்படி செய்யும் விஷயங்கள் கடைசியில் அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அதைப்போலவே, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் எடுக்கவேண்டும் என்று சில இளைஞர்கள் வினோதமான ஸ்டண்ட் செய்து இறுதியில் உயிரிழக்கும் பரிதாபமான சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதும் வழக்கமானது. அந்த வகையில், சமீபத்தில் இது போன்ற ஒரு வீடியோ […]
விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக மிஷ்கின் இயக்கும் படங்கள் எல்லாம் சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். எனவே, அவர் விஜய் சேதுபதியுடன் அவர் ‘ட்ரைன்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்காக […]