சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக கனமழை பெய்ததால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், இன்று (டிசம்பர் 2) சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வந்தே பாரத் ரயில், தேஜஸ் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், பாண்டிச்சேரி MEMU ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே […]
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7) மாலை 4 மணிக்கு கோவில் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த சூரா சம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இப்பொழுதே கோவிலில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என […]
பீகார் : தீபாவளி, சாத் பண்டிகையின் போது பயணிகளின் நெரிசலைக் குறைக்க, கோவை – பீகார் மாநிலம் பாராவுனி இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவையில் இருந்து வரும் 26ம் தேதி, நவம்பர் 2, 9 மற்றும் 16ம் தேதிகளில் பகல் 11.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக பாராவுனியில் இருந்து வரும் 29ம் தேதி, நவம்பர் 5, 12 மற்றும் 19ம் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. ரயில் […]
டெல்லி : தீபாவளியை முன்னிட்டு, உங்கள் பண்டிகை பயணத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு ரயில்களில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறித்தியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில், எளிதில் தீப்பற்ற கூடிய அல்லது பட்டாசுப் பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வது, ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 67 இன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 164 மற்றும் […]
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும் எனவும் தெரிவித்திருந்தனர். மேலும், உருவாகவுள்ள புயலுக்கு டானா எனவும் பெயரிட்டுள்ளனர். இந்த டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் அக்.-24 அன்று இரவு அல்லது அதற்கு அடுத்த நாள் அக்.-25ம் தேதி அதிகாலையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை […]
சென்னை : இந்தியன் ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி போர்வை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உறையுடன் தலையணை , விரிப்பு ஆகியவை வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போர்வை மற்ற துணி உபகாரணங்களை முறையாக ரயில்வே நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அப்படி, வசூல் செய்யப்படும் தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா.? முறையாக தலையணை உறை, காட்டன் போர்வைகள், கம்பளி போர்வைகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா […]
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், மாற்று ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது. இதனால், ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட மற்றும் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. […]
விஜயவாடா : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் பல நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக, ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ஆந்திராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை, வெள்ளப்பெருக்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த விஜயவாடாவில் விடிய விடிய முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார். ஆந்திரா, […]
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் கொட்டித் தீர்த்த கனமழையால் விஜயவாடா உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. வயநாடு நிலச்சரிவு துயரம் மறைவதற்குள், ஆந்திரா தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. மேலும், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]
சென்னை: நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை , தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள், தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரம் ரயில் நிலைத்தில் ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கி வரும் 55 மின்சார ரயில்கள் மேற்கண்ட காலகட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே […]
தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 : இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் 2024-2025இல் அப்ரண்டிஸ்ஷிப் அடிப்படையில் 2,438 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பூர் கேரேஜ் ஓர்க்ஸுக்கு 1337, பொன்மலை மத்திய தொழிற்கூடத்துக்கு 379, போத்தனூர் சமிஞ்ஞை (சிக்னல்) தொழிற்கூடத்துக்கு 722 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்கும் பணி, https://sr .indianrailways.gov.in/ இன்று […]
ரயில் சேவை : தூத்துக்குடியில் இதற்கு முன்னர் இருந்து கோவைக்கும் மற்றும் பகல் நேரத்தில் சென்னைக்கும் இயக்கப்பட்டு வந்த இணைப்பு ரெயில்கள் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்டது. அதன் பின் அந்த ரயில் சேவையானது தொடங்கவில்லை. இதனால் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை வழங்க வேண்டும் என்று ரெயில் பயணிகள், வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால், தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாரத்தில் 2 நாட்கள் செல்லும் புதிய ரெயில் இயக்க […]
தெற்கு ரயில்வே : ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ஏசி (AC) சிறப்பு ரயில்களை அறிவித்து பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக இயக்கப்படவுள்ள அந்த ரயில்கள் தாம்பரம் மற்றும் மங்களூரு சந்திப்பை இணைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவைகள் ஜூன் மற்றும் ஜூலை 2024 தொடக்கத்தில் இயக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. தாம்பரம்-மங்களூரு AC சிறப்பு ரயில்: தாம்பரம் – மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (எண் 06047) : இந்த சிறப்பு ரயில் வெள்ளி […]
Thoothukudi – Mettupalayam: தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை துவங்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வண்டி எண் 16766 வார நாட்களில் தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது, இந்த விரைவு ரயில், இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக மறுநாள் காலை 6.18 மணிக்கு கோவை ரயில் நிலையம் வருகிறது, தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. Read More – வாகனப் […]
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, வண்டலூா் – ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்படவுள்ள ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், […]
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய் கிழமையில் (ஜன. 14, 16) தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன. இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் […]
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச.5ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் […]
மாண்டஸ் புயலின் தாக்கத்தை பொறுத்து பாதுகாப்பு தேவை இருப்பின் இரவு நேரத்தில் ரயில்கள் தாமதமாக புறப்படும். – தென்னக ரயில்வே. மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் வடதமிழகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 6 மாவட்டங்களில் இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு புயலின் தாக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும் எனவும் மற்ற பகுதிகளில் சேவை வழக்கம்போல இருக்கும் […]
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அனைத்து ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரயில் சேவை படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவில், முத்துநகர் , உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1-ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும். […]