சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் முன் பதிவு கடந்த மார்ச் 19-ஆம் தேதி காலை தொடங்கிய நிலையில், விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதிலும் வேகமாக டிக்கெட்கள் விற்பனை ஆனது. […]
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மார்ச் 23இல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது. […]
திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனினும்,வழக்கம்போல் இலவச தரிசனம் எப்போதும் செயல்படும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டு ரூ.100 என்ற ஒரே கட்டண தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழக்கம்போல் இலவச […]
சென்னை புத்தக கண்காட்சி டிக்கெட்டை பபாசி இணையதளத்தில் நாளை முதல் பெறலாம். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சி அனுமதி கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 500 பதிப்பாளர்கள் உடன் 800 அரங்கங்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பபாசி செயலாளர் முருகன் கூறுகையில், பள்ளி கல்லூரி மாணவர்கள் பயனடையும் வண்ணம் 10 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் […]
தமிழக போக்குவரத்துத்துறை, இலவசமாக அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இன்று முதல் கட்டணமில்லா பயணசீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை தொடங்கினார். அதன் படி மகளிர் அரசு போக்குவரத்துகழகத்திற்கு கீழ் உள்ள நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். அதிலிருந்து பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக […]
கட்டணமின்றி நகரபேருந்தில் பயணம் செய்யும் பயணச்சீட்டின் மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், ஒன்றாக அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற கோப்பும் ஒன்றாக இருந்தது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, […]
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியை காண நாளை முதல் டிக்கெட் விற்பனை. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. தற்போது முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் இரு அணிகளும் விளையாடி வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. அதில், கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளையும் காண 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கலாம் என […]
ரயிலில் டிக்கெட் எடுக்காத பூனையை பாதுகாவலர்கள் வெளியே அழைத்து செல்லும் காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு சீனா மாகாணத்தில் விரைவு ரயில் ஒன்று, புறப்பட காத்திருந்தது. அப்பொழுது ரயிலுக்குள் பூனை ஒன்று இருப்பதை கண்டறிந்த ரயில்வே பாதுகாவலர் ஒருவர், பூனையை ரயிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். இதனை ரயிலில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்தார். அதன்பின் அந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் பாதுகாவலர் கூறுவது போல, “டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்க முடியாது” என குறிப்பிட்டிருந்தார். […]
தீபாவளி பண்டிகையை ஒட்டி இப்பொழுதே ஆன்லைனில் பேருந்து முன்பதிவுகள் தொடங்கியது. தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸ் ஊரடங்கால் கடந்த ஆறு மாதங்களாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் தற்பொழுது வருகிற மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இந்நிலையில் மக்கள் இத்தனை நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் தற்போது அரசு சில தளர்வுகள் மக்களுக்காக அறிவித்துள்ள நிலையில் வெளியூர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருடம் தோறும் தீபாவளி […]
நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க […]
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை – டெல்லி ராஜதானி சிறப்பு ரயில், ஜூன் முதல் இயக்கப்பட உள்ள நிலையில், ரயில்களுக்கான முன்பதிவு நேற்றே ஐஆர்சிடிசி இணையத்தில் தொடங்கப்பட்டது. மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் பயண சீட்டு எடுக்க மட்டுமே முடியும். பயண சீட்டை ரத்து செய்தல், பணம் திரும்ப பெறுதல் போன்றவை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் […]
சிறப்பு ரயிலில் செல்லுபடியாகாத டிக்கெட்டில் பயணம் செய்ததாக ஒரு குடும்பத்திற்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்த இந்தியன் ரயில்வே. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பின் அரசு சிறப்பு ரயிலை இவர்களுக்காக இயக்கியது. இதில், டெல்லியில் இருந்து 15 ஜோடி சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு கடந்த 11-ம் தேதி முதல் இயக்கப்பட்டு […]
தெற்கு ரெயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. தற்போது தெற்கு ரெயில்வே அந்த கட்டுப்பாடுகளை நீக்கி, எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. அதனால் சுற்றுலா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குழுக்களாக செல்வோர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு […]
வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் கீப்பரும் ,மூத்த வீரருமான தினேஷ் ராம்தின் இரண்டாவது போட்டிக்கு புறப்படும்போது நின்று கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு இரண்டாவது போட்டிக்கான டிக்கெட் மற்றும் சிறிய பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது டி20 மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. நேற்று முன்தினம நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி […]
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு வழங்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில், பயணசீட்டு வழங்கும் இயந்திரத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறையும் சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.