அலர்ட்டா இருங்க மக்களே! 7 மணி வரை 13 இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Very heavy rain

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் . ஃபெஞ்சல் புயல் காரணமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் என ஏற்கனவே, தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்து இருந்தார்.

இந்த புயலின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  இந்நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்பது பற்றிய விவரம் குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியீட்டு வருகிறது.

அப்படி தற்போது அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அந்த மாவட்டங்கள் குறித்த விவரத்தை தெரிவித்து உள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதைப்போல, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல்லில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு கோவை திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்