சென்னை : ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையை கடந்த இந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 12 மணி நேரமாக நகராமல் புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு கணித்துள்ளது. தற்பொழுது, கடலூரில் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கி இரவு 11.30 மணியளவில் கடந்து முடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், இன்று காலை வரை புயல் கடலிலேயே இருப்பதாகவும் அது கரையை கடக்கவே இல்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே, புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 7ம் புயல் கூண்டு உட்பட 9 துறைமுகங்களிலும் ஏற்றப்பட்ட […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழையால் கருவடிக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சித்தன்குடி, வெங்கட்டா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் 100-க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் […]
புதுச்சேரி : நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பொது, புதுச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரே நாளில் 47 செ.மீ மழை பெய்துள்ளதால், தாழ்வானப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. தமிழகம் – புதுச்சேரி எல்லைப்பகுதியான கோட்டக்குப்பம், ஆரோவில், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. […]
சென்னை : வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே முழுமையாக கரையைக் கடந்தது. நேற்று (நவ.30) மாலை 5.30-க்கு கரையைக் கடக்க தொடங்கிய புயல், இரவு 11.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையைக் கடந்தபோது பலத்த சூறைக்காற்று வீசியது. இந்நிலையில், நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று […]
சென்னை : கடந்த 5 நாட்களாக முதல் தமிழகத்தில் ஆட்டம் காட்டி வந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையைக் கடந்துள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு முன்பிலிருந்தே அதன் போக்கை வானிலை ஆய்வு மையத்தால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது. இதனால், புயல் கரையைக் கடக்கும் சரியான இடத்தையும் சரியான நேரத்தையும் கணிக்க முடியாமலே இருந்தன. ஆனால், அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் ஃபெஞ்சல் புயலானது கரையைக் கடக்க தொடங்கியதென வானிலை […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எப்போது தான் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று (நவ.30) மாலை மரக்காணத்திற்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. முன்னதாக வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதனுடைய வேகம் குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது கொடுத்த தகவலின் படி, […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்த நிலையில். மரக்காணத்திற்கு அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்திருந்தது. ஏற்கனவே, சென்னை வானிலை ஆய்வு மையம் ஃபெஞ்சல் புயல் காரணமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. புயல் கரையை கடப்பதால் […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் . ஃபெஞ்சல் புயல் காரணமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் என ஏற்கனவே, தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்து இருந்தார். இந்த புயலின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஃபெஞ்சல்” புயலானது எப்போது கரையை கடக்கும்? எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர் ” தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஃபெஞ்சல்” புயலானது மேற்கு திசையில் நகர்ந்து சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை புயலாக கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. இதனையடுத்து, சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, புயல், தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி கடல் போல் காட்சி […]