புயல் எச்சரிக்கை.! 3 துறைமுகங்களில் 4, 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

Default Image

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 4,5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15கிமீ வேகத்தில் நெருங்கி வந்து கொண்டு கொண்டிருகின்றது.

இதனை ஒட்டி, 8,9,10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு வருகிறது.

தற்போது, சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 4,5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் துறைமுகங்கள் சுற்றியுள்ள கடலோர கிராமங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கண்டிப்பாக கடலுக்குள் செல்ல கூடாது என்பதையும் இந்த 4,5ஆம் ஆண்டு எச்சரிக்கை கூண்டு குறிப்பிடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்