சென்னை : வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படவுள்ளது. காற்றழுத்த […]
சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 4,5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15கிமீ வேகத்தில் நெருங்கி வந்து கொண்டு கொண்டிருகின்றது. இதனை ஒட்டி, 8,9,10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு வருகிறது. தற்போது, […]
நாகை, கடலூர் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை காலை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை அடுத்து நாகப்பட்டினம், எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் […]