Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் துபாயில் ஒருவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அதே போல அண்டை நாடான ஓமனில் 18 […]
Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் சீர்குலைந்துள்ளன. இது கடந்த 75 ஆண்டுகளில் பெய்த மிகப்பெரிய மழை என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் […]
UAE Rain: ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு அதிகப்படியான மழைபொழிவால், துபாய் நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. கடந்த 24 […]
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகத்தீவிரமாக உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக […]
தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில், கடலூரில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவக்கியுள்ளது. வரலாற்றில் இது 3வது அதிகபட்ச மழை என்றும், இதற்கு முன்பு […]
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்த மூன்றுமாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக […]
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் நாளை மறுநாள் சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் கடலூர், […]
கடந்த 2ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. மேலும், 2ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அது மட்டும் இல்லாமல், ஓரிரு இடங்களில் அதிகாலை […]
நேற்று தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. அதேபோல நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை […]
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமாரி ஆகிய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வட்டங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ. 6000 , மற்ற பகுதிகளுக்கு ரூ.1,000 நிவாரண தொகையாக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளிட்ட அறிக்கையில், “நிவாரண நிதியை […]
தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணாமாக தமிழகத்தில் இன்று (31.12.2023) திருநெல்வேலி மற்றும் […]
இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணாமாக தமிழகத்தில் இன்று (30.12.2023) மற்றும் நாளை (31.12.2023) ஆகிய நாட்களில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று திருநெல்வேலியின் பல பகுதிகளில் 20 […]
தென் மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தால், உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடை உயிர்சேதம் என பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பின்னர் வெள்ள நிவாரண உதவி தொகை விவரங்களை அறிவித்தார். ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா 6000 ரூபாய், […]
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கனமழை, பெரு வெள்ளத்தை தமிழக மக்கள் எதிர்கொண்டு உள்ளனர். வட தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டம் மக்கள் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதேபோல, தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அந்த ஆற்றின் கரையோர பகுதி மக்கள் வெள்ள பாதிப்பால் மிகுந்த பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். […]
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பெருமளவு பாதித்துள்ளன. வெள்ளத்தால் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பல்வேறு மாணவர்களின் முக்கிய சான்றிதழ்கள் நீரில் மூழ்கின. தமிழகத்தில் 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்! இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்ட்டனர். ஏனென்றால், அந்த ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களின் நகலை பெறுவதற்கு சாதாரண நாட்களில் மிகுந்த சிரமமாக […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் . குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கரையோர வழித்தடத்தில் இருந்த பகுதிகள் பெருபாலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ள பதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர தவித்து வருகின்றன. சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடி மற்றும் […]
தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. திருநெல்வவேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. தூத்துக்குடி வெள்ளம் : 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. யார் யார் எந்தெந்த பகுதிக்கு.? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு பலரும் தங்கள் உதவிகளை, நிவாரண பொருட்களை அனுப்பி […]
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் பல்வேறு இடங்களில் நீடித்து கொண்டு இருக்கிறது. உதவிக்காகவும், மீப்பு பணிகளுக்காகவும், உணவுக்காவும் இன்னும் மக்கள் தவித்து வரும் சூழல் நிலவுகிறது. அவர்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். வெள்ளத்தால் தனி தீவில் சிக்கியவர்களை போல் தவித்து வரும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மீட்ப பணிகளை நேற்று முதல்வர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு […]
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மழைநீரால் சூழ்ந்தன. அங்குள்ள மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. தற்போதும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் முழுவதும் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் வருகை : இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் […]