சென்னை : தங்கம் விலை நாள்தோறும் புதிய சாதனைகளைப் படைத்து வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காடச் செய்து வருகிறது. குறிப்பாக, நேற்றைய தினம் ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை மாற்றங்களைச் சந்தித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
காலையில் சற்று குறைந்திருந்த தங்கம் விலை, மாலையின் நிலவரப்படி அதிரடியாக உயர்ந்தது. நேற்றைய மாலை வர்த்தகத்தின் முடிவில், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,200-க்கும், சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டுவந்தது.
நேற்றைய தொடர் உயர்வின் தொடர்ச்சியாக, இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தங்கம் பிரியர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக 22 காரட் தங்கம் ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,220-க்கும், சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மறுபுறம், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ. 20 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,000-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 96,000-க்கும் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.
தங்கம் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே தொடரும் வெள்ளி, ஒரு கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ ரூ. 2,55,000-க்கும் எவ்விதத் தடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
