அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு.!

சென்னை: அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் முறையாக அம்மா உணவகங்களை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, சென்னையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்திலிருந்து ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா உணவகங்கள் கடந்த 2013-16 காலகட்டத்தில் திறக்கப்பட்டன. தற்போது 399 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கான ஊதியம் ரூ.300-ல் இருந்து ரூ.325-ஆக உயர்த்தி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூ.3.07 கோடி கூடுதல் செலவாகும். சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில், நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025