பாஜகவை எதிர்க்க ராகுல் காந்தி சரியான நபர் – முதலமைச்சர்

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின்.

பாஜகவின் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலுக்கு மாற்று தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சோனியா காந்தியின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்திருப்பதாகவும், இந்திய ஒற்றுமை பயணம் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை நன்கு உணர முடிவதாகவும் கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க காங்கிரேஸை உள்ளடக்கிய தேசிய அளவிலான கூட்டணி தேவை. தேசிய அளவில் காங்கிரஸ் முக்கியத்துவத்தை இழக்கவில்லை, புத்துயிர் பெற்று வருகிறது. ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.