Rahul Gandhi : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளது மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர். Read More – இந்திய பகுதிகளை உரிமை கொண்டாடும் சீனா.! எதிர்ப்பு காட்டும் அமெரிக்கா இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி , கே.சி.வேணுகோபால் […]
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை சென்றதை அடுத்து தற்போது கிழக்கில் இருந்து மேற்காக தனது அடுத்தகட்ட நடை பயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தி நகருக்குள் செல்ல முயன்ற ராகுல் காந்திக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் சிங்கங்கள். […]
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய ராணுவத்தை துவங்கி இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதலை வீரர்களை ஒருங்கிணைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு அரசியல் பிரபலங்கள் மரியாதை செலுத்தியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் […]
அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள படாதிரவாதான் கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அசாமில் ராகுல் யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று காலை அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள […]
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் மற்றும் மோடி என கத்தி ராகுல் காந்தியை நோக்கி முழக்கமிட்டனர். இதையடுத்து பேருந்தை நிறுத்தச் சொன்ன ராகுல்காந்தி வேகமாக கீழே இறங்கி சென்றார். பின்னர் மீண்டும் பேருந்துக்குள் வந்த அவர் அந்த […]
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து குறித்து, ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பண்டித நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ் தான் நேஷனல் ஹெரால்டு. 1937-ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய முன்னாள் பிரதமர் நேரு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 1942-ஆம் நேஷனல் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை மட்டும் விவசாய கட்சிக்கு விட்டுக்கொடுத்து 199 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக 200 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடுமையாக போராடி வருகிறது. இன்று , ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் சாதுல்ஷாஹர் நகரில் பிரச்சரத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் […]
இம்மாதம் நடைபெறும் 5 மாநில தேர்தல் என்பது அடுத்து வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதாலும், 5 மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் மாநில அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதாலும் பாஜக , காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு பற்றிய பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறார். இதுகுறித்து இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் , அதன் பின்னர் 22 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் ஆதரவில் இருந்து பின்வாங்கியதால் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினர் அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மத்திய […]
பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்ரா 2.0, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் செப்டம்பர் 7ம் தேதி அன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. ஜனவரி 30ம் தேதி காஷ்மீர் வரை நடைபெற்றது. இந்த யாத்திரையின் போது, 126 […]
இன்று சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் இருக்கக்கூடிய 90 சட்டமன்ற தொகுதிகளில், 20 சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் உள்ள பல இடங்கள் நக்சல் பாதித்த பஸ்தார் பிரிவில் உள்ளதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடக்கும் இடங்களில் […]
பயனர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்து ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியானது காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், பவன் கேரா, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பபட்டுள்ளது. உரையாடல்கள் குறித்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அலர்ட் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]
கடந்த 9-ஆம் தேதி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தெலுங்கானாவில், காங்., எம்.பி., ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, ராகுல்காந்தி, ஜக்தியால் என்ற இடத்தில் பேரணியாக சென்று அங்கு உரையாற்றினார். தெலுங்கானாவில் […]
வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் தென் இந்தியாவில் தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தல் மிக முக்கியமானதாக உள்ளது. காரணம், தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு, அதற்கு பிறகான 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி பெரும்பான்மை பெற்று, சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி மற்றம் நடைபெறாத தெலுங்கானாவில் இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இங்குள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை […]
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் அடுத்து, நாடு முழுக்க 2024 ஏப்ரல் மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் பரபரப்புகள் தொற்றிக்கொள்ள வரும் வேளையில் பிரதான கட்சி தலைவர்களும் தங்கள் தேர்தல் வேலைகளை மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தல் வேலைகளை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆரம்பித்து விட்டார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஆரம்பித்த பாரத ஒற்றுமை யாத்திரையானது […]
சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்திக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அதாவது, கோவாவில் இருந்து வாங்கி வந்த ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை காங்கிரஸ் மூத்த தலைவரும் தாயாருமான சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார். இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. இதன்பின் அந்த […]
டெல்லியில் ராகுல் காந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார். நாட்டின் அனைத்து துறைகளிலிருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்திலிருந்தும் அதானி அவர்களுக்கு பங்கு சென்று கொண்டுள்ளது. அதற்கு இந்திய நாட்டின் பிரதமர் மோடி துணையாக இருக்கிறார். அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாப்பதன் காரணமாகவே பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதானி குழும நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த […]
அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்த 5 மாநில தேர்தல்களில், மிசோராம் சட்டமன்ற தேர்தலும் ஒன்று. மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வெவ்வேறு தேதிகளில் நடைபெறும் தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளன. அதிலும் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மாநிலந்தோறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் சேர்த்து மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பிரதேசம் […]
அடுத்த மாதம் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மிசோராம் மாநிலமும் ஒன்று. 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளை பிரதான கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மிசோரம் சென்றுள்ளார். இன்று (திங்கள்கிழமை) மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் ஆளுநர் மாளிகை நோக்கி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டார். மிசோரம் […]