சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751 கோடி சொத்துக்கள் முடக்கம்! காரணம் என்ன?

National Herald case

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ் தான் நேஷனல் ஹெரால்டு. 1937-ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய முன்னாள் பிரதமர் நேரு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 1942-ஆம் நேஷனல் … Read more

பாஜகவை தோற்கடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளம்! கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்….

sonia gandhi - k veeramani

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணி முன்னெடுக்கும் பணிகளைப் பாராட்டியும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது, அவரது கடிதத்திற்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கூட்டணியில் நம்பிக்கை வைத்தற்கும், பெரியார் திடலுக்கு வருகை … Read more

நாய்க்குட்டிக்கு பெயர் வைத்த விவகாரம்.! ராகுல்காந்தி – சோனியா காந்தி மீது புதிய புகார்.!

noori puppy

சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்திக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அதாவது, கோவாவில் இருந்து வாங்கி வந்த ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை காங்கிரஸ் மூத்த தலைவரும் தாயாருமான சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார்.  இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. இதன்பின் அந்த … Read more

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் தலைவரா? சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் கோரிக்கை!

congress meeting

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை … Read more

சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு! 5 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி!

SoniaGandhi

திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். இதுதொடர்பாக எம்.பி. கனிமொழி வெளியிட்டிருந்த அறிக்கையில்,  அனைத்து துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார். எனவே,  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை … Read more

பாஜகவை எதிர்க்க ராகுல் காந்தி சரியான நபர் – முதலமைச்சர்

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின். பாஜகவின் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலுக்கு மாற்று தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சோனியா காந்தியின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்திருப்பதாகவும், இந்திய ஒற்றுமை பயணம் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை நன்கு உணர முடிவதாகவும் கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க … Read more

காங்கிரஸ் எம்பிக்களை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி!

குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காங்கிரஸ் எம்பிக்களை சந்திக்கிறார் சோனியா காந்தி. காங்கிரஸ் எம்பிக்களை இன்று சந்திக்கிறார் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சி எடுக்க வேண்டிய நிலைபாடுகள் குறித்து எம்பிக்களுடன் சோனியா காந்தி ஆலோசிக்க உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், பண வீக்கம், விலைவாசி … Read more

ராகுலின் ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!

மைசூரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார்.  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார். கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டுள்ளார். மாண்டியாவில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தி நடந்து செல்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா காந்தி பொது நிகழ்ச்சிக்கான இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தனது … Read more

#BREAKING: காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு.!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடக்கம். அக்.17-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். … Read more

#Breaking : அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜரானார் சோனியா காந்தி.!

நேஷனல் ஹீரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க துறை முன்பு ஆஜராகி உள்ளார்.  நேஷனல் ஹீரால்டு பத்திரிகை நிறுவன சொத்துக்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் பணமோசடி நடந்துள்ளதாக, பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையை அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி … Read more