அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் – வெள்ளை அறிக்கை வெளியீடு!

Default Image

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ.92,000 கோடி மதிப்பிலான நடைமுறைக்கு வரவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சமர்ப்பித்தார்.

420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. அதில், 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரூ.9740 கோடி மதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை.

கைவிடப்பட்ட அறிவிப்புகள் – 26, அதன் மதிப்பீடு ரூ.5,469.78 கோடி, நிதி விடுவிக்கப்படாமல் பணி துவங்கபடாமலும் உள்ள அறிவிப்புகள் – 143, அதன் மதிப்பீடு ரூ.76,618.58 கோடி, பணிகள் நடைபெற்று வரும் அறிவிப்புகள்- 348, அதன் மதிப்பீடு ரூ.1,47,922.88 கோடி, நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள் – 1167, அதன் மதிப்பீடு ரூ.87,405 கோடி என்றும் செலவினம் ரூ.41,844 கோடி எனவும்  வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்