2022ம் ஆண்டின் இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு. துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று முதல் மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நீர்வள துறை மானிய கோரிக்கை மெது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் […]
மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக காலை 10 மணிக்கு கூடுகின்றது சட்டமன்ற கூட்டத்தொடர். கடந்த 18ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 2022 – 2023-ம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதன்பின் மறுநாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 24ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அமைச்சர்களின் பதில் உரைக்கு பின் தமிழக சட்டமன்றம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் […]
ஏப்ரல் 6ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 6 முதல் மீண்டும் கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படுவதற்கான தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று 30ம் தேதி அலுவல் குழு முடிவு செய்யும் என்றும் துறைவாரியாக […]
சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு ஏன் ? என ஈபிஎஸ் விளக்கம். தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து வருகிறார். அப்போது, சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அதிமுக அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர்வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையிலிருந்து இன்று நிதியமைச்சர் அவர்களது பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று […]
10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக்,ஐடிஐ செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு. 2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்தார்.அப்போது,மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மாதம் ரூ.1000: இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க […]
அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ.92,000 கோடி மதிப்பிலான நடைமுறைக்கு வரவில்லை. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சமர்ப்பித்தார். 420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை அனைத்து சட்டமன்ற […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக ராசு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ளதால் இதனை கண்டித்து, சென்னையில், வரும் 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் குறித்த விமர்சனம் இந்த நிலையில், […]
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் உறுதி. தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் என்ன நிலை ஏன் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார். நீங்கள் தொடர்ந்து இரண்டு […]
திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம். தாலிக்கு தங்கம் திட்டம்: தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்பி வேலுமணி தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும். 3 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே, தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைப்பு: […]
இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேருக்கு பயனடைந்துள்ளனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தகவல். தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என தமிழ்நாடு அரசு […]
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த 18ம் தேதி தாக்கல் செய்தார். அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 […]
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார்.அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: குறிப்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வேளாண் பட்ஜெட்: இதை தொடர்ந்து,நேற்று […]
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். சசிகலா அறிக்கை தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் […]
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். ஆசிரியர் கி.வீரமணி ட்வீட் தமிழக பட்ஜெட் குறித்து […]
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்து அதிமுக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் […]
தமிழக வேளாண்மை பட்ஜெட், கறி செய்து சாப்பிட முடியாத காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போடப்பட்ட இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றிற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக வேளாண் அமைச்சர் பெருமிதம் பொங்கக் கூறியிருக்கிறார். ஆனால், அவற்றில் எத்தனை அறிவிப்புகளால் […]
2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை இரண்டாவது முறையாக வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் வேளாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் என முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயம் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான வேளாண் பட்ஜெட் இது என்பதாகும். தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 – எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி […]
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை ஒத்திவைப்பு பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். இந்த நிலையில் தமிழக பட்ஜெட் […]
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை ஒத்திவைப்பு பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் […]
2022-23-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் 2-வது வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் தாக்கல் செய்தார். அப்போது வேளாண் பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு […]