மேகதாது விவகாரம்: அதிமுக வெளிநடப்பு..!

admk

தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மேகதாது அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், கர்நாடக அரசுக்கு எதிராக  கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து கொண்டு இருக்கும்போது, அமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு … Read more

மேகதாது விவகாரம்… ஒரு செங்கல் கூட வைக்க முடியாது.! இபிஎஸ் தீர்மானம் மீது துரைமுருகன் பதில்.!

Edappadi Palanisamy - Minister Duraimurugan

தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கவனஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்தில் காவிரி மேலாண்மை வாரிய பணிகள் முழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மேகதாது  அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், … Read more

உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு – பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து!

mk stalin

2024-24ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை அந்த துறையை சார்ந்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு கூடுதல் மானியம், கருப்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது. இதுபோன்று, உற்பத்தி திறனை மேம்படுத்துதல், இழப்பீடு, நிவாரணம் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றது. … Read more

வேளாண் பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை… எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்!

EDAPPADI PALANISWAMI (2)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நான்காவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வைத்தார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டால் … Read more

வேளாண் தொழில் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்!

graduates

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 -25ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுமார் 1 மணி நேரம் 57 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். இந்த வேளாண் பட்ஜெட்டில் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, பல்வேறு அரிப்புகள் மற்றும் மானியம் உள்ளிட்ட சலுகைகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார். … Read more

விவசாயிகளே! பயிர் காப்பீடு, நெல் கொள்முதல், கரும்பு சாகுபடி… பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

agricultural budget 2024

தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள், விவசாயிகளுக்கு மானியம், நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-2024 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடியும், சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ.12.40 கோடியும் ஒதுக்கீடு … Read more

2024-25 தமிழக வேளாண் பட்ஜெட்… அரசின் முக்கிய அறிவிப்புகள்.!

TNAgriBudget2024

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் படஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை கீழே காணலாம். தமிழக வேளாண் பட்ஜெட் பயிர் காப்பீடு குறித்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு … Read more

விரைவில் 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம்! பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு!

farmers

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேரைவையில் அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2022-23ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.380.40 கோடி … Read more

கூடுதல் மானியம்! ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டத்திற்கு 206 கோடி ஒதுக்கீடு..!

mannuyir thittam

2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்பின், பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக அமைச்சர் வெளியிட்டு வருகிறார். அதில் அமைச்சர் கூறியதாவது, 2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அறியவிக்கப்பட்ட திட்டங்கள் செயப்படுத்தப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட பலன்களை தந்துள்ளது. நீண்ட கால திட்டங்களுக்கான பணிகள் தகுந்த மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் … Read more

TN Budget 2024 Live : தமிழக வேளாண் பட்ஜெட் நேரலை…

TNAgricultureBudget

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கும் புதிய திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதனை அடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025அம ஆண்டுக்கான வேளாண் படஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை நேரலையில்  இந்த செய்தி … Read more