மதுரையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற உத்தரவு.!

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

madurai hc

மதுரை:மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை ஒரு மணி நேரத்திற்குள் அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, குறிப்பாக தவெக மாநாட்டுத் திடல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுவதற்காக வழங்கப்பட்டது.

முன்னதாக, மதுரை தவெக மாநாட்டுத் திடலில் நட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு கார் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு சென்று சாய்ந்து விழுந்த கொடிக் கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். மேலும், அப்பகுதியில் நிறுத்தி வாகனங்களும் அப்புறப்படுத்தினர்.

மேலும், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டுக்கு சொந்த ஊரில் பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த நிலையில்,  மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரத்தில் பேனர்கள், கட் அவுட்களை அகற்றி தகவல் தெரிவிக்க மதுரை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.