சென்னை :சோசலிச கியூபாவை காப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டை கொண்டாடுவோம் ஆகிய தலைப்புகளில் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”கூட்டணி என்பதற்காக தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டிக்காட்டாமல் இருந்ததும் இல்லை, அவர்கள் சுட்டிக்காட்டுவதை நாங்கள் புறக்கணித்ததும் இல்லை. ஏனெனில் எங்களில் பாதி கம்யூனிஸ்டுகள். எனது பெயரே ஸ்டாலின். நமக்குள் இருக்கும் நட்பு தேர்தல் நட்பு அல்ல, கொள்கை நட்பு.
நமக்குள் இருப்பது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி.. கொள்கை நட்பு. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்மையில் இடதுசாரி கட்சிகள் மீது பாசம் வந்துவிட்டது. அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பேசலாமா? இங்கே யாருக்கும் யாரும் அடிமை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
