சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 2025ல் ஐக்கிய இராச்சிய பயணத்தின்போது, லண்டன் SOAS (School of Oriental and African Studies) பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வு, திருக்குறளின் ஆசிரியரான திருவள்ளுவரின் புகழை உலகளவில் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது. மேலும், லண்டனில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
unknown nodeஇதற்கு முன்னதாக, லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,” உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை காரல் மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்.
அம்பேத்கர் வசித்த வீட்டை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் சாதியால் ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞர், அறிவின் மூலம் உயர்ந்து, இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பியாகவும் மாறியது இங்குதான். பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் புகைப்படம் மனதை மிகவும் தொட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node