சென்னை : கன்னியாகுமரில் நிறுவப்பட்டுள்ள 133 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று, திருவள்ளுவர் சிலை அருகே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருக்குறள் கண்காட்சி அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை தொடர்ந்து திருக்குறள் மற்றும் […]
கன்னியாகுமரி : தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு 3 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். நேற்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார். இன்று குமரியில் திருக்குறள் கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலமைச்சர் அறிவித்த 7 அறிவிப்புகள் : குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகிற்கு பெருந்தலைவர் காமராஜர் […]
கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்று உயர்கல்வி படிப்பு பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். கன்னியாகுமரியில் […]
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இது தொடர்பாக,அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாக்குமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல் பாலம் கட்டுவதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த,டெண்டர் 04.05.2022 14.00 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே திருநெல்வேலி வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் (H), C&M மூலம் பெறப்படும். பணிகளின் விவரங்கள்,பணிகளின் […]
இன்று முதல் குமரியிலுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் […]