சென்னை :சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கனிமொழி, ”கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் உடனே நின்றது தி.மு.க.வும், அரசும் தான். எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும், நமக்காக வந்த மக்களுக்கு நாம் நிற்க வேண்டும்.
ஒரு கட்சியின் தலைவர் அந்த நேரத்தில் ஒரு ஆறுதல் கூட சொல்லாமல், தன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைத்து, அந்த இடத்தை விட்டு போவது, நான் இதுவரை பார்த்திராத ஒன்று. அந்த கட்சியை சேர்ந்த அடுத்த கட்ட தலைவர்கள் கூட அங்கு விரைந்து செல்லாதது, மனிதாபிமானமற்ற செயல்.
குற்றம் யார் மீது உள்ளது என விசாரணையில் உண்மை வெளிவரும், யாராக இருந்தாலும் . உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படும். கரூர் நெரிசல் குறித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பதிவு உச்சகட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது.
நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களோடு தமிழக அரசு நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு கட்சியின் தலைவர் அங்கிருந்து போவது, தன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைப்பது இதுவரை நான் பார்த்திடாத ஒன்று.
சூழலை அமைதியாக்க நினைக்காமல் வன்முறை தூண்டும் வகையில், இன்னும் உயிரிழப்புகள் ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். மக்களைப் பற்றி கவலை இல்லாமல், எப்படியாவது |அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என நினைப்பது தவறு” எனக் கூறியுள்ளார்.
