இதை கவனித்தீர்களா.? விஜயின் தவெக கொடி அறிமுக விழாவில் நெகிழ்ச்சி நிகழ்வு.!

சென்னை : தவெக கொடி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்முறையாக விஜய்யின் பெற்றோர் அவரது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில், டிவிகே தலைவர் விஜய், கட்சி கொடியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவரது பெற்றோர் ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விஜய்யின் உரை உட்பட நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்த விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரகேர், தாய் சோபா ஆகியோர் தவெக கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
அவர்களுக்கு வரவேற்பு அளித்த புஸ்ஸி ஆனந்த், அவர்கள் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். மேலும், விழா தொடக்கத்தில் விஜய் தனது தாய், தந்தையிடம் ஆசி வாங்கியதும் மேடை ஏறி உரையாடினார். விழா மேடையில், விஜய் தனது பெற்றோர் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரைப் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அவர் “எனது பெற்றோரை இங்கு பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி, அம்மா மற்றும் அப்பா” என்றார். முன்னதாக, புஸ்ஸி ஆனந்த் பிடியில் விஜய் சிக்கியுள்ளதாக, சந்திரசேகர் கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன், விஜய்யும் தந்தையுடன் பேசாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் பட விழாவான ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில், விஜய்யின் பெற்றோர் கடைசியாக கலந்து கொண்டனர், அதற்கு முன்னதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஜய்யின் பட விழாவில் மட்டுமே கலந்து கொண்ட ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் முதல் முறையாக விஜய்யின் கட்சி விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025