சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே பார்லிமென்ட்டில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவது போல் இருப்பதால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, திரைத்துறையில் இருந்து முதல் […]
சென்னை : தவெக கொடி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்முறையாக விஜய்யின் பெற்றோர் அவரது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில், டிவிகே தலைவர் விஜய், கட்சி கொடியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவரது பெற்றோர் ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். விஜய்யின் உரை உட்பட நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்த விழாவிற்கு […]
மாத இதழில் வந்த தவறான செய்தி குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மாத இதழில் வந்த தவறான செய்தி குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் ” வார இதழ் ஒன்றில் என் பேட்டி ஒன்று வந்துள்ளது. நான் எப்போதும் வெளிப்படையாகவே பேசுவேன். என்னை பற்றியும், ‘நான் கடவுள் இல்லை’ என்கிற என் அடுத்த படத்தை பற்றி கேட்டிருந்தார்கள். விஜயகாந்த் பற்றி […]
மாநாடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் சில விஷயங்களை கூறியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, எஸ் ஏ […]