கிழ எறங்குன தான் முத்தம் கொடுப்பேன்...தொண்டரை அன்பாக அதட்டிய த.வெ.க தலைவர் விஜய்!

பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர் ஒருவர் ஒலிப்பெருக்கித் கம்பத்தின் மேல் ஏறி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

vijay fan

ஈரோடு :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்த இந்தக் கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு தொண்டர் உற்சாகத்தின் உச்சியில் ஸ்பீக்கர் தூண் மீது ஏறி ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார்.

இதைப் பார்த்த விஜய் உடனடியாக அவரை கவனித்து, “கீழே இறங்கினால்தான் முத்தம் கொடுப்பேன்” என்று கூறி அவரை கட்டுப்படுத்தி இறங்க வைத்தார்.தொண்டர் கீழே இறங்கியதும், விஜய் அவருக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வு கூட்டத்தில் குவிந்திருந்த தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த அன்பான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

கூட்டத்தில் விஜய் தனது உரையைத் தொடர்ந்து, தொண்டர்களின் உற்சாகத்தைப் பாராட்டினார். இதுபோன்ற நிகழ்வுகள் தவெகவின் பிரச்சாரக் கூட்டங்களில் தொண்டர்களின் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், கூட்டத்தில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கட்சிக்கு மிகப் பெரிய பலம். அவரைப் போல இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி, திமுக ஒரு தீயசக்தி… TVK ஒரு தூயசக்தி… இந்த தீய சக்திக்கும் தூய சக்திக்கும் தான் போட்டியே எனவும், களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியும். களத்தில் இல்லாதவர்களையும், களத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்க முடியாது. நீங்க கேட்குறீங்களேணுலாம் எதிர்க்க முடியாது எனவும் விஜய் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.