சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அவருடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நேற்று ஈரோடு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் பேசியிருந்தது ” டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்லாமல் மாநில அரசை குறை சொல்கிறார். அதைப்போல, […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக அமைச்சர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். ஏற்கனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ” மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக எனவும், 2026 மன்னர் ஆட்சி ஒழிக்கப்படும், தேர்தலில் வெற்றிபெற்றுவிடும் என ஸ்டாலின் கனவு நிறைவேறாது” என பேசியிருந்தார். அவர் பேசியதற்கு அமைச்சர் கே.என்.நேரு , அமைச்சர் ரகுபதி, அமைச்சர் தங்கம் தென்னரசு […]
ஈரோடு : கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். ஆனால், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரஞ்ச் அலர்ட் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. […]
ஈரோடு : நாளை (ஆகஸ்ட் 19.08.2024) திங்கள்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து வைத்து கொள்ளுங்கள். மேட்டுக்கடை மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். பெருந்துறை […]
ஈரோடு : பவானி சாகர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சி உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் வகையில், அங்குள்ள விவசாயிகள் பயன்பெற அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே அத்திக்கடவு – அவிநாசி திட்டம். தொடர் உண்ணாவிரத போராட்டம் : இந்த திட்டத்தை விரைவில் செய்லபடுத்தி விடுவோம் என அவ்வப்போது தமிழகஅமைச்சர்கள் கூறி வருவதாகவும், ஆனால் இன்னும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை என்று கூறியும் பாஜக […]
சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் அவர்களை இடமாற்றம் செய்து புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமாரை தமிழக அரசு நியமனம் செய்தது. அமுதா ஐஏஎஸ் உட்பட தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர் என மொத்தம் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 10 புதிய மாவட்ட ஆட்சியர்களின் விவரங்கள்… ராணிப்பேட்டை ஆட்சியராக J.U.சந்திரலேகா […]
மக்களவை தேர்தல் : நாடு முழுவதும் 543 தொகுதிகளில் நடைபெற்ற முடிந்த தேர்தலுக்கான வாக்கு எணிக்கையானது இன்று காலை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் முன்னிலை வகித்து வந்து பெருபாலான தொகுதியில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி தமிழக மக்களவை தொகுதியான ஈரோட்டிலும் திமுக சார்பாக போட்டியிட்ட கே.பிரகாஷ் 5,20,971 வாக்குகள் பெற்று 2,16,361 வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. அவரை தொடர்ந்து […]
Ganesha Moorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 3வது முறை எம்பியாக இருந்து வந்த நிலையில், ஈரோடு எம்பியாக 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி சிட்டிங் எம்பியாக இருந்து வந்தார். இந்த சூழலில் வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் […]
ஈரோடு மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை ஒட்டி நடந்த திருவிழாவில் தேர் சரிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் மாதங்களில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் சேரும் நாளை தைப்பூசத் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதலில் உயிர்கள் தோன்றிய நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை பகவான் முருகன் மணம் புரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் தைப்பூசம் நாளன்று முருகன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. இன்றைய […]
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. இதனை அறிந்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளானர் இதில், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கொண்டு வனத்துறையினரை சுட்டுள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தி வனத்துறையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். இந்த தேடுதல் […]
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாலக்கரை பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் 32 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் குரிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டும் தலைமை ஆசிரியை உத்தரவின் பேரில் கழிவறை சுத்தம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில், மாணவ மாணவியரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியை […]
இன்று விழாவுக்கு வந்ததற்கு எனக்கு 5 லட்சம் லாபம். அது எனக்கில்லை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுகாக திமுக நிர்வாகி செந்தில் வழங்கிய நிதியுதவி என கலகலப்பாக பேசினார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம் பெருத்துறையில் திமுக நிர்வாகி வீட்டு திருமண விஷேசத்திற்கு சென்றுள்ளார். நாளை திருமண விழா நடைபெறுவதை ஒட்டி, இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசுகையில், திமுகவில் இளைஞரணி […]
ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து. கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். கருமுட்டை விவகாரத்தில் இராசு சுதா மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு […]
சிறுமி கருமுட்டை வழக்கில் தனியார் ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு. ஈரோடு சிறுமி கருமுட்டை வழக்கில் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீலை அகற்றக்கோரி தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்த அரசு உத்தரவையும் […]
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர்,கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை அளித்த […]
கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாய் உள்ளிட்ட பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் […]
சிறுமியின் கருமுட்டையை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 2 மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இவர்களிடம் 16 வயது சிறுமியிடம் 4 ஆண்டுகளாக கருமுட்டை […]
சிறுமியின் கருமுட்டை விற்பனை விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை என மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கவால்துறையினர் சிறுமியின் தாயார் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலியை கைது செய்தனர். கருமுட்டை விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட டைலர் மாலதி என்பவரையும் […]
ஈரோடு மாவட்டத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மணியன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வயது 52. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் கவுந்தபாடியிலிருந்து பெருந்துறைக்கு பேருந்தில் பயணிகளோடு புறப்பட்டுள்ளார். சென்று கொண்டிருக்கும் பொழுது வெள்ளாங்கோயில் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பேருந்தை இயக்கும் பொழுது அவருக்கு […]