சென்னை :காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக அரசு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ”உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு. அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.
காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை. வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக அரசின் “தற்காலிக ஆட்சி முறை” காரணமாக பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். NARI 2025 தரவரிசையில் சென்னையின் மதிப்பெண் 61.7% ஆக உள்ளது, இது தேசிய சராசரியை விட குறைவு என்பதை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு குறித்து மக்கள் உணரும் அவநம்பிக்கையை இது பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
