சென்னை : தமிழ்நாட்டில் காவல்துறையைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி.யாக சுஜாதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜி மூர்த்தி ராமநாதபுரம் டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு- 1 […]
சிவகங்கை : தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவங்கள்என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ படுகொலை, ஈரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ரவுடி ஜான் வெட்டி கொலை, சிவகங்கையில் குடும்ப தகராறில் கொலை சம்பவம் என ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. இன்று காலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நார்த்தவாடா கிராமத்தில் பூண்டியை சேர்ந்த லோகேஷ் எனும் 19 வயது இளைஞரை ஒரு கும்பல் கொலை செய்துள்ளது. இது குறித்து திருவிலாங்கோடு காவல்துறையினர் […]
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த இவரை போலீசார் தேடிச் சென்றபோது, காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஐகோர்ட் மகாராஜா மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேளச்சேரி ஆதம்பாக்கம் […]
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது மனைவி கண் முன்னே வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பட்ட பகலில் இப்படியா என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்ப வைத்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், பூபாலன், சரவணன் ஆகிய மூன்று பேரும் காலில் சுடப்பட்டநிலையில் பிடிபட்டனர். கார்த்திகேயன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 […]
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது மனைவி கண் முன்னே வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட கிச்சிபாளையம் பகுதி SMC காலணி பகுதியை சேர்ந்த ஜான் மீது கிச்சிபாளையம், செவ்வாய் பேட்டை பகுதியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் மனைவி, மகன், மகளோடு வசித்து வந்துள்ளார். இவர் இன்று தனது […]
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்தை வழிமறித்து ஏறிய 3 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலை நடத்தியது தெரிய வந்துள்ளது. தாக்குதலின்போது, பேருந்து பயணிகள் கூச்சலிட்டத்தால் அந்த மாணவனை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியுள்ளது. பின்னர், வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை மீட்டு காவலர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு, 2026 தேர்தலில் திமுக அரசை மாற்ற உறுதியேற்போம் என்று விஜய் வலியுறுத்தினார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் […]
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என கடந்த 5ம் தேதி தவெக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், தவெக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவை கண்டித்து திமுகவினர் தகராறு செய்துள்ளனர். அதாவது, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்ததும், திமுகவினரை செர்ந்த சிலர் தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் […]
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தர்மபுரியில் நேற்று பேசிய சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால் என்ன செய்ய முடியும் என வினா எழுப்பியிருந்தார். ஆனால், தற்போது அவர் நேரில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் சீமான் வீட்டு காவலாளிக்கும், […]
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பான நேரில் ஆஜராக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். இதை வீட்டில் இருந்த காவலாளி உள்ளிட்ட இருவர் கிழித்தெறிந்தனர். இதை விசாரிக்க சென்ற போலீசாரையும் அவர்கள் தாக்க முற்பட்டதால், […]
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர். அதன் பிறகு சம்மன் கிழிக்கப்பட்டது, அது குறித்து விசாரிக்க போலீஸ் வந்தபோது, சீமான் வீட்டு பாதுகாவலருடன் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், கைத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய சீமான், “இவ்வளவு மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? நான் விசாரணைக்கு […]
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார், சம்மனை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டிவிட்டு சென்றனர். அதில் நாளை காலை ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த சம்மனை ஒருவர் கிழித்துவிட்டார். அதுகுறித்து விசாரணை செய்ய வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பாதுகாவலர் பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜுக்கும் […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பட்ட சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராகவில்லை, இதையடுத்து நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் […]
மயிலாடுதுறை : சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்டதற்காக கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை ஒரு கும்பல் கொலை செய்ததாக கூறப்படும் செய்தி மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மீதம் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஊர்மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் எனும் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் […]
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய தேதிகளில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதன்படி, அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும் என […]
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில் குஷ்புவும் கலந்து கொண்டார். தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் அறிவித்ததால் முன்னதாகவே மதுரையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தாலும், தடையை மீறி பேரணி செல்லப்பட்டது. அப்பொழுது தீச்சட்டி ஏந்தியும், கண்ணகி வேடமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மிளகாய் இடித்து கண்ணகி சிலைக்கு பூசினர். பின்னர், இதற்கு அனுமதி இல்லை என்று கூறி பேரணி நடத்திய […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் இன்று 2வது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி இந்த […]
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடப்படுகிறது. மேலும், கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, நாளை (31ம் தேதி) புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை. எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை முதலில் எழுந்த நிலையில், அது நிகாரிக்கப்பட்டு இவ்வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு […]
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை முதலில் எழுந்த நிலையில், அது நிகாரிக்கப்பட்டு […]