த.வெ.க மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற அமர்வு மறுப்பு.!

கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

TVK Vijay Stampede

சென்னை :கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக சார்பில் இன்று (செப்டம்பர் 29, 2025) சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை இன்று (செப்டம்பர் 29, 2025) ஏற்க மறுத்துவிட்டது. அந்த மனுவை நாளை (செப்டம்பர் 30, 2025) தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது, மேலும் இந்த வழக்கு வழக்கமான விடுமுறை அமர்வின் போது வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. இருப்பினும், தவெக இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.