காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டம் குறித்த முழு விவரத்தையும் தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும். – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. காவிரி ஆற்று நீர் பெருபாலான நீர் கடலில் கலந்து விடுவதால், காவிரி ஆற்றுநீரை சேமிக்க கரூர் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்டபட வேண்டும் என அதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை இன்று விசாரித்த நீதிபதி அமர்வு ,’காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக […]
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியாற்றி வந்த கலைச்செல்வி தனியார் ஆலையின் வாகனத்தின் வாகன பதிவிற்கு லஞ்சம் கேட்டபோது அவர்கள் அளித்த புகாரின் பெயரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கலைச்செல்வி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட கலைச்செல்வி ஜாமீன் கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு […]
பாரதமாதா ,மற்றும் தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, கிருஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் அருமனையில்,முன்னதாக நடைபெற்ற மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதா, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் அளித்த புகாரை அடுத்து […]
மதுக்கடைகளை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் முறையீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் மதுக்கடைகளை மூடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் முறையிட்டார். அவர் கொரனோ பரவல் அதிகரித்துள்ளதால் வழிபாட்டு கூடங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் வழிபட தடை விதித்துள்ள போதிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் […]
தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க கூடாது எனக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ் வழியில் படித்தவர்கள் என்றால், பள்ளியிலிருந்தே தமிழ் வழி கல்வி பயின்றவர்களா? அல்லது பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? என கேள்வி […]
நீட் தேர்வு ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்ட சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள மாணவர் தொடர்ந்த வழக்கில், தனது 10 மற்றும் 12-ம் வகுப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க உத்தரவு விடவேண்டும் என மாணவர் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜூலை 31-ம் தேதி சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு […]
சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி, உள்துறை செயலர் பதிலளிக்க நோட்டீஸ். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல் துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்தார் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஜிபி, உள்துறை செயலர் பதிலளிக்கவும், காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோருக்கு […]
சாத்தான்குளம் கொலை வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், […]
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சாட்சியம் அளித்த பெண் காவலர் உரிய பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.
வாக்கு எண்ணிக்கையிலும், வெற்றி அறிவிப்பிலும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறி வேட்பாளர் தேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் வேட்பாளர் பிரியதர்ஷினி பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை வருகின்ற 7-ம் தேதி ஒத்திவைத்தது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி என்பவரும் , தேவியை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர் போட்டியிட்டார். நேற்று முன்தினம் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இருவரும் […]