மதுரை :மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டில், இன்று வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், பங்கேற்பாளர்களுக்கு உதவவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, வெயில் காலையில் இருந்தே கொளுத்த ஆரம்பித்துள்ளது.
இதனால், மாநாட்டிற்கு வந்த 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கம்போட்டு கீழே விழுந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் உடனே அவர்களை தூக்கிச் சென்று, மாநாட்டு திடலில் உள்ள சிறப்பு முகாமில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த விஜய், தொண்டர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
தற்பொழுது. மாநாட்டுத் திடலில் வெப்பநிலை 35.6°F வரை உயர்ந்துள்ளதால், ராட்சத ட்ரோன்கள் மூலம் தண்ணீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மாநாட்டுப் பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலும், முதலுதவி மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்காக 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உட்பட 600 மருத்துவ ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
மேலும், ட்ரோன்கள் மூலம் மருத்துவ பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சி மாநாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, பங்கேற்பாளர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
