“மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்” – மெட்ரோ இரயில் நிறுவனம்.!

போலியான சென்னை மெட்ரோ இரயில் நிறுவன வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

chennaimetro

சென்னை :சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) “மெட்ரோவில் வேலை” என்கிற பெயரில் போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது. அதன்படி, எந்தவொரு தனிநபர் அல்லது முகவர்களையும் நம்பி பணம் செலுத்த வேண்டாம் எனவும், மோசடி அறிவிப்புகளை 044-24330035 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற சமூக ஊடகங்கள் Instagram, Facebook போன்றவற்றில் அவ்வப்போது வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ இரயில் நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை.

பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான http://chennaimetrorail.org/careers என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். இதைத் தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் (Employment News) அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களுக்கான அனைத்து தகவல்தொடர்புகளும் உறுதிப்படுத்தக்கூடிய CMRL மின்னஞ்சல் முகவரியில் இருந்தோ அல்லது CMRL-இன் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் இருந்தோ மட்டுமே வரும். Rediff mail, Yahoo, Gmail போன்ற இணைய முகவரிகள், மொபைல் எண்கள், WhatsApp அல்லது போலியான CMRL லெட்டர் ஹெட் அல்லது முகமைகள் மூலமாகத் தொடர்பு கொள்ளப்பட்டால் அது அதிகாரப்பூர்வமற்றது” என்று

unknown node