சென்னை :சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் இன்று சிபிஎம் சண்முகம், விசிக தொல். திருமாவளவன், சிபிஐ முத்தரசன் ஆகியோர் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமா, முத்தரசன் உள்ளிட்டோர் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்
தமிழ்நாட்டில் SC, ST வன்கொடுமை தடுப்பு சட்டம் நடைமுறையில் இருந்தாலும், ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு அது ஒரு சிறந்த தீர்வாக அமையவில்லை. இதனால், தனிச்சட்டம் கொண்டு வர கூட்டணிக் கட்சிகள் அழுத்தம் கொடுப்பதால், திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”ஆணவக் கொலையை தடுக்க, சட்டம் இயற்ற தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன, தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதல்வரிடம் பேசினோம்” என்றார்.
