சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. வருகின்ற (ஜனவரி 26 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை […]
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தேர்தல் விதிகள் இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமலானது. தேர்தல் வேலைகளிலும் பிரதான அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக திருமகன் ஈவேரா, […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், போராட்டம் நடத்தினால் காவல்துறை வழக்குப்பதிவு செய்வதாகவும் சரமாரியான குற்றசாட்டை கே.பாலகிருஷ்ணன் நேரடியாகவே முன்வைத்தார். இது பற்றி அவர் பேசும்போது ஆர்ப்பாட்டம், […]
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 24வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக பற்றி அவர் கூறிய, ‘ கருகிய தாமரையை அண்ணாமலை அல்ல, அவர் […]
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாஜகவை விமர்சனம் செய்ததை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள திமுக அரசையும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக கூறி கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுக […]
சென்னை : 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. ஆனால், வழக்கமாக வழங்கப்படும் ரூ.1,000 குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என தமிழக […]
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” ஐயா நல்லகண்ணு அவர்களின் […]
சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டாலும், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி தர மறுத்து வருகிறது. அதனால், தொடர் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்த காரணத்தால், சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக […]
புதுடெல்லி : காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணமாக மலையாள சினிமாவை விட்டு விலகியதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாகப் போய்க்கொண்டு இருக்கும் பாலியல் புகார் பற்றி பல நடிகைகள் தைரியமாக முன் வந்து தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களைப் பற்றிப் பேசி வருகிறார்கள். நடிகைகள் கொடுக்கும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் […]
கேரள : கர்ப்பமாக இருந்தபோது தன்னை முகேஷ் எட்டி உதைத்ததாக நடிகை சரிதா வேதனையுடன் தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி பேசியுள்ளார். பாலியல் வழக்கில் சிக்கிய முகேஷ் பிரபல மலையாள நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான எம்.முகேஷ் மீது 3 நடிகைகள் பாலியல் தொந்தரவு பற்றி புகார் கொடுத்துள்ள நிலையில், அவர் மீது ஐபிசி 376 சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாகப் பெண் நடிகை ஒருவர் […]
திருவனந்தபுரம்: திரைப்படக் கொள்கையை வகுப்பதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கம் செய்யப்பட்டார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து உள்ளது. மலையாள பிரபலங்களின் சிலரது கேவலமான உண்மை முகம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பான கொல்லம் மாவட்ட ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மலையாள நடிகருமான முகேஷ் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் […]
திருநெல்வேலி : மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், பெண்ணுடைய வீட்டார் ஆத்திரமடைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் நாற்காலிகள் அங்கிருந்த பொருட்கள் என அனைத்தையும் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி என்பவருக்கும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பாளையங்கோட்டையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கலப்பு திருமணம் […]
மக்களவை தேர்தல்: திமுக கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மதுரை தொகுதியிலும், சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளனர். காலை 9.30 மணி நிலவரப்படி திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் 17 ஆயிரம் வாக்குகள் பெற்று சுமார் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் 4000 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சரவணனை விட 500 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அனல் பறக்கும் […]
Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வேளைகளில் அரசியல் கட்சியினர் வெகு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வார வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதியன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை […]
Su Venkatesan : அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் என்பவரும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்று மதுரை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் […]
DMK : மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதியுடன் ஆட்சி பொறுப்பு நிறைவடைய உள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் 543 தொகுதிகளின் ரிசல்ட் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் தமிழகம் (39) […]
CPM : திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. Read More – 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்! திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 , மதிமுகவுக்கு 1, கொமதே […]
DMK alliance : மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மமக, கொங்கு நாடு மக்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து […]
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீடு தொடர்பான குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என். நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்.பி திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த வாரம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட […]