சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் டிசம்பர் 20 அன்று அரங்கேறியது. ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி சங்கர் […]
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை […]
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை […]
திருநெல்வேலி: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (டிச,13) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
தூத்துக்குடி: வங்கக்கடலில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியதால் நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது. மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. […]
திருநெல்வேலி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை மதியத்திற்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று ஒருநாள் (12.12.2024) பள்ளிகள் விடுமுறை விடப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 17 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, […]
நெல்லை : ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியில் எதிர்வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் எனும் பெண் முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்துள்ளார். இன்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் திடீரென மாயமாகி இருக்கிறான். அதைத் தொடர்ந்து பல இடங்களில் அந்த சிறுவனைத் தேடியும் கிடைக்காததால், அருகில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெறிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த […]
திருநெல்வேலி : மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், பெண்ணுடைய வீட்டார் ஆத்திரமடைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் நாற்காலிகள் அங்கிருந்த பொருட்கள் என அனைத்தையும் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி என்பவருக்கும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பாளையங்கோட்டையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கலப்பு திருமணம் […]
சென்னை : தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் (10.06.2024) நாளையும் (11.06.2024) ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான […]
நெல்லை: மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. 2012இல் கொலை செய்யப்பட்ட தேவேந்திரகுள வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் […]
சென்னை: திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மே 20ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலில் அதிகபட்சமாக காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்திய வானிலை […]
PM Modi: தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போயிருக்கிறார்கள் என்று நெல்லை பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் வாகன பேரணி, கூட்டத்தில் பங்கேற்று தங்களது வேட்பாளர்களுக்கு […]
PM Modi : தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தும், அடிக்கலும் நாட்டியும் வைத்தார். இதில் குறிப்பாக, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் திட்டம் உள்ளதவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு! அதேசமயம் குலசேகரன்பட்டினத்தில் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பாளைங்கோட்டையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் நெல்லை உள்ளிட்ட உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நெல்லையிலுள்ள அறிவியல் மையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் […]
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு […]
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதி பெயரைகேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக தச்சநல்லூரைச் சேர்ந்த 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி பணம் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது. பேருந்துகளில் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது.! போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு.! […]