ஊரடங்கு மீறல் : தமிழகத்தில் 1,64,357 பேர் கைதாகி விடுதலை.!
தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,64,357 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக 1,52,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளியே சுற்றியதால் 1,29,705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.61,29,744 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.