தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,75,636 பேர் கைதாகி ஜாமினில் விடுவிப்பு.!

தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றிய 1.7 லட்சம் பேரை கைது செய்து, ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் … Read more

ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த 2 பேர் கைது.!

குஜராத் மாநிலத்தில் ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுளத்து. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஊரடங்கை மீறி பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் சில இடங்களில் ட்ரோன் மூலம் … Read more

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது . கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் பிரதமருக்கு கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்குஇடையில்  பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் பிரதமர் மோடி, ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் … Read more

ஊரடங்கு மீறல் : தமிழகத்தில் 1,64,357 பேர் கைதாகி விடுதலை.!

தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,64,357 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக 1,52,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் வெளியே சுற்றியதால் 1,29,705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.61,29,744 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் ஏடிஎம் : கோவையில் அசத்தும் HDFC வங்கி.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற யாரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதில் வங்கிகள் மட்டும் ஒரு சில இடத்தில் … Read more

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை.?

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளது. பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த உரையாடலில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டெல்லி முதல்வர் … Read more

தனது மனைவியை 'கும்பகோணம் to புதுச்சேரி' சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்.!

தனது மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக கும்பகோணம் டு புதுச்சேரி சைக்கிளில் அழைத்து சென்ற கணவர். கும்பகோணத்தை சேர்ந்த 65 வயதுடைய அறிவழகனின் மனைவி 60 வயதுடைய மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கார் மற்றும் தனியார் வாகனங்களில் செல்ல பணம் இல்லாததால் தனது மனைவியை சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அழைத்து … Read more

நெல்லையில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்களுக்கு புதிய நிபந்தனை.!

நெல்லையில் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி பச்சை, ஊதா, சிகப்பு ஆகிய மூன்று நிறங்களில் பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது. இதில் பச்சை நிற அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், ஊதா நிற அட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சிகப்பு நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சீட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி … Read more

ஏப்ரல் 28ம் தேதி வரை மலேசியாவில் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் முகைதீன் யாசின் அறிவிப்பு.!

மலேசியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரசால் இதுவரை 1,615,049 பேர் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 96,791 ஆக உள்ளது. மேலும் இதுவரை 362,538 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்கள். அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை … Read more

ஊரடங்கு நீட்டிப்பா.? நாளை மாலை அமைச்சரவை கூட்டம் – முதல்வர் பழனிசாமி

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீடிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் … Read more