இன்று நம் பாரத நாடு முழுவதும்,73வது சுதந்திர தினவிழாகோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் இந்தியபிரதமர் நரேந்திர மோடிதேசிய கொடியை ஏற்றினார்.
அதேபோல சென்னை கோட்டை கொத்தளத்தில்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதேசிய கொடியேற்றி மக்களிடையே முக்கிய அறிவிப்புகள் பற்றி உரையாற்றினார். முதலமைச்சராகமூன்றாவது முறையாக கோட்டையில் கொடியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் கூறுகையில், ‘ சுதந்திர போராட்டதியாகிகளின் ஓய்வூதியம்15 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். கங்கை ஆறு மறுசீரமைப்பு போல காவேரியை மறு சீரமைப்பு செய்யநடந்தாய் வாழி காவேரிஎனும் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யப்படும் எனவும்,
வேலூர்மாவட்டத்தை மூன்றாக பிரித்துவேலூரைதலைநகரமாக வைத்து ஒரு மாவட்டமாகவும்,திருப்பத்தூரைதலைநகரமாக வைத்து ஒரு மாவட்டமும்,ராணிப்பேட்டையை தலைநகரமாக வைத்து ஒரு மாவட்டம் என மூன்று மாவட்டமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக தற்போது திகழ்வது போல,நீர் மிகை மாநிலமாகவும்விரைவில் மாறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும்ஹிந்திபேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்க கூடாது எனவும் கூறினார்.