7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில் பயின்று வரக்கூடிய மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு தருவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தா நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தற்பொழுது சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் […]
தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது, விடுதிகள் செயல்படவும் அனுமதி கொடுக்கபடுவதாகவும் தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்போது முதலே தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு தளர்வுகளாக தமிழக அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஊரடங்கும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உத்தரவு வெளியாகியுள்ளதுடன், கல்லூரிகளில் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது […]
பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தனது தீவிரத்தை குறைத்துக் கொள்ளாமல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. சில இடங்களில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஆந்திராவில் வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் அரை […]
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் மறைவு மத்தியில் மட்டுமின்றி அனைவர் இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்புலமின்றி அரசியலில் வேர்விட்டு நிழல்கொடுத்த ஆலமரம் இன்று சரிந்துள்ளது. மத்திய அமைச்சர் பஸ்வானின் மறைவுக்கு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:- பிறப்பு சம்பவமாக இருக்கலாம் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்புடையவர் பஸ்வான். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மை காலமாக தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 20-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில் ஆகிய இருவர் […]
நாளை கொண்டாணப்படும் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட சிசிடிவி கேமரா மூலம் வாகன தணிக்கை, ரோந்து பணிகள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நாளை 74 வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தை ஒட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றவுள்ளார். மேலும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் யாரும் […]
சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு சொத்து உரிமையில் சம பங்கு வழங்குவது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், 2005 இந்து சொத்தூரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், ஆண்பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண்பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் […]
கன்னியாகுமரியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீண்டகரை-பி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கடல்சீற்றம் நடந்தது. அப்போது கடல்நீர் ஊருக்குள் புகுந்த போது, அப்பகுதியில் உள்ள மரியதாஸ் என்பவருடன் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மரியதாஸின் மகன் பிரதீப் அஸ்வின் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். […]
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், அயோத்தியில் ராமர் கோவில் […]
முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார் .தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் […]
நாள் ஒன்றுக்கு 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதன் பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 4.18 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜிங்க் வைட்டமின் […]
நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்? என்று ஸ்டாலின் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதலமைச்சர் நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது.இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? காவல்துறைத் தலைமையாக, இருக்கும் முதலமைச்சர் இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும்,விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் […]
யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை கூறி வருகிறேன் .மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் முதலமைச்சர் கேட்கவில்லை.மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைகளையும் கூறினேன். யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை .ஆக்கப் […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வருகின்ற 13-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது.தற்போது மூன்றாவது கட்டமாக மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நகர் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம்.சென்னையை தவிர்த்து மாநிலத்தில் பிற […]
நடிகை கஸ்தூரி ட்வீட்டரில் டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்று எண்ணினேன் என்று ட்வீட் செய்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று […]
கொரோனாவில் உயிரிழந்தவர் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை என தமிழக அரசு கூறியுள்ளது. உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடலை அரசே அடக்கம் செய்து வருவதால் பலர் தங்களது எதிரப்பை தெறிவித்து வருகின்றனர். இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி […]
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். முக்கியமாக சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். தமிழக்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில […]
மார்ச் 29ம் தேதி முதல் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்த முதல்வர் பழனிசாமி. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஞாயிற்றுகிழமை ( மார்ச் 29) முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 […]
பேரவையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதியை மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பிப்ரவரி 24-ஆம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது.தமிழக சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.அவரது அறிவிப்பில், பெண் குழந்தைகளுக்காக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்த நாளான, வரும், 24ம் தேதி, மாநில […]
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா இன்று தமிழக சட்டபேரவையில் தாக்கலாகிறது காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று,காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.நேற்று […]