செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை இன்று இரவு வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் மோடி பங்கேற்க வேண்டும் என முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை இன்று இரவு 7.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
unknown node