செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதில் பெரிதும் உதவிய காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தார். கடந்தமாதம் ஜூலை 28ஆம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி வெகு கோலாகலமாக தொடங்கி , கடந்த 10ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள், போட்டி நடைபெற்ற இடங்கள், மற்ற பொது இடங்கள், அரசியல் பிரபலங்கள், விஐபிகளின் பந்தோபஸ்து […]
செஸ் ஒலிம்பியாட் போன்று உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதை பாராட்டிய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு […]
தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நிகால் சரினுக்கும் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. தற்போது ஒட்டுமொத்தமாக, செஸ் வீரர்களுக்கு அவர்கள் விளையாடிய விதம் அடிப்படையில் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விருது அறிவிக்கப்படும். அந்த வகையில், ஏற்கனவே தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது. அதே போல இன்னோர் இந்திய வீரர் நிகால் சரினுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தமிழக வீராங்கனை […]
போர் பதற்றத்துக்கு மத்தியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் உக்ரைன் அணி தங்கம் வென்று அசத்தல். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று 11-வது மற்றும் கடைசி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கலம் பதக்கம் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்க பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளி பதக்கமும் […]
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் 4-வது சுற்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நார்வே அணியின் நட்சத்திர வீரர் மேக்னஸ் கார்ல்சன், இன்றைய ஆட்டத்தில் மங்கோலியா வீரர் தம்பசுரன் உடனான ஆட்டத்தில் 30வது […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றி வெற்றி அடைந்துள்ளார். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய வீரர்களாக பிரக்யானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் சாத்வனி கலந்து கொண்டனர். தற்போது இதில் எஸ்டோனிய வீரரான கிரில் சுகாவை […]
முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரகுமானை வீழ்த்தி இந்திய அணி வீரர் ரவுனக் சத்வானி வெற்றி. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் 3 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவில் 188 அணிகள், பெண்கள் பிரிவில் […]
மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே மோதல். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டியை துவங்கி வைக்கும் நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் […]
சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, தற்போது சென்னையை விட்டு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி , நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் […]
பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்களை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்று அரங்கத்தினுள் அழைத்து வந்தனர். 44வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி இன்று ப்ரமாண்டமாக தொடங்கியுள்ளது. இதன் துவக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உச்ச பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கலந்து கொள்ள அரங்கத்தில் நுழைந்தனர். அவர்களை அரசுப்பள்ளி […]
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை மிக அற்புதமாக கூறி வருகின்றார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா இன்று சென்னையில் கோலாலமாக தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு நிகழ்வு, உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை […]
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ஒரே நேரத்தில் இரு பியானோவில் தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார். இவ்விழாவில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச நாடுகளின் கொடி அணிவகுப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டது. […]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு […]
தமிழக பாரம்பரிய உடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் துவக்க விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். அவரை விழா குழுவினர் வரவேற்று உள்ளனர். மேடையில் தமிழக பாரம்பரிய உடையில் அமர்ந்துள்ளார் தமிழக முதல்வர். அடுத்ததாக பிரதமர் மோடி […]
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் என்பவரை காவல்துறையினர் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். இன்று சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு செஸ் விளையாட்டு கலைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதில், முக்கியமாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் என்பவரை காவல்துறையினர் முன்னெச்செரிக்கை […]
செஸ் ஒலிம்பியாட் விளம்பர புகைப்படங்களில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை என மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ள்ளது. இதில், கலந்துகொள்ள போட்டியாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளனர். இந்த போட்டி தமிழகத்தில் நடைபெறுவதால், செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரப்படுத்தபட்டது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. அதனால், பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் […]
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு […]
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார் குவிப்பு. பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 28, 29-ஆம் தேதிகளில் சென்னையில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போட […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா […]
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை இன்று இரவு வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் […]