தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நிகால் சரினுக்கும் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. தற்போது ஒட்டுமொத்தமாக, செஸ் வீரர்களுக்கு அவர்கள் விளையாடிய விதம் அடிப்படையில் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விருது அறிவிக்கப்படும். அந்த வகையில், ஏற்கனவே தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது. அதே போல இன்னோர் இந்திய வீரர் நிகால் சரினுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தமிழக வீராங்கனை […]
போர் பதற்றத்துக்கு மத்தியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் உக்ரைன் அணி தங்கம் வென்று அசத்தல். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று 11-வது மற்றும் கடைசி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கலம் பதக்கம் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்க பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளி பதக்கமும் […]
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் 4-வது சுற்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நார்வே அணியின் நட்சத்திர வீரர் மேக்னஸ் கார்ல்சன், இன்றைய ஆட்டத்தில் மங்கோலியா வீரர் தம்பசுரன் உடனான ஆட்டத்தில் 30வது […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றி வெற்றி அடைந்துள்ளார். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய வீரர்களாக பிரக்யானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் சாத்வனி கலந்து கொண்டனர். தற்போது இதில் எஸ்டோனிய வீரரான கிரில் சுகாவை […]
முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரகுமானை வீழ்த்தி இந்திய அணி வீரர் ரவுனக் சத்வானி வெற்றி. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் 3 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவில் 188 அணிகள், பெண்கள் பிரிவில் […]
தமிழக பாரம்பரிய உடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் துவக்க விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். அவரை விழா குழுவினர் வரவேற்று உள்ளனர். மேடையில் தமிழக பாரம்பரிய உடையில் அமர்ந்துள்ளார் தமிழக முதல்வர். அடுத்ததாக பிரதமர் மோடி […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக […]
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை இன்று இரவு வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் […]
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி,தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக,ஆண்கள் பிரிவில் 188 அணிகளும்,பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன.இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழகத்தை சேர்ந்த வீரர்களான கார்த்திகேயன்,சேதுராமன் ஆகியோர் […]
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்த ரூ.1 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. இதுதொடர்பான தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச […]
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உட்பட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில்,இவ்விழாவை முதலமைச்சர் […]
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஜூன் 19) மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் […]
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.இதில், பொதுத்துறை அமைச்சர்,விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், பொதுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற […]